பிரபாஸின் பிரம்மாண்ட காதல் காவியம் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைப்பு.. வலிமை என்ன ஆகும்?

சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மற்றும் ஆந்திர திரையரங்குகள் மூடப்பட்ட சூழ்நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆர்.ஆர்.ஆர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கண்டிப்பாக பொங்கலுக்கு வருவோம் என சொன்ன பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போட்டு வரும் நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் வர அச்சப்படுவர் என்பதை கருத்தில் கொண்டு படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

பிரபாஸின் காதல் காவியம்

பிரபாஸின் காதல் காவியம்

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாண்ட காதல் காவிய திரைப்படம் ராதே ஷ்யாம். பல நூறு கோடிகளில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பான் இந்திய படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் பொங்கல் ரேசில் இருந்து ஒதுங்கினாலும் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை என அறிவித்த ராதே ஷ்யாம் படக்குழு தற்போது படத்தை கால வரையரையின்றி தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒமிக்ரான் தான் காரணம்

ஒமிக்ரான் தான் காரணம்

நாடு முழுவதும் மக்கள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல இடங்களில் லாக்டவுன் போடப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். ராதே ஷ்யாம் படத்தை சரியான நேரத்தில் வெளியிடுவோம் என யுவி கிரியேஷன்ஸ் அறிவித்து இருக்கிறது.

ஒடிடி ரிலீஸ் இல்லை

ஒடிடி ரிலீஸ் இல்லை

ஒடிடியில் ராதே ஷ்யாம் படம் வருமா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விடக் கூடாது என்பதற்காக பெரிய திரைகளில் கூடிய விரைவில் படத்தை வெளியிட முயல்கிறோம் என படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டு ஒடிடியில் நேரடியாக வெளியிடும் எண்ணம் தற்போது இல்லை என்பதை உணர்த்தி உள்ளது.

வலிமை என்ன ஆகும்

வலிமை என்ன ஆகும்

ஒரு பக்கம் பொங்கல் போட்டியில் இருந்து ஆர்.ஆர்.ஆர் மற்றும் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் விலகுவது நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்திற்கு பலம் என்றாலும் மறுபக்கம் கொரோனா காரணமாக ஞாயிறு லாக்டவுன், இரவு நேர ஊரடங்கு, 50 சதவீதம் மட்டுமே தியேட்டர்களில் அனுமதி உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக வலிமை படம் ரிலீசும் தள்ளிப் போகும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை எப்படியாவது இந்த தடவை வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X