twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபாஸின் ராதே ஷ்யாம் ... பிளஸ்,மைனஸ் என்ன… ரசிகர்களின் பார்வை !

    |

    சென்னை : உலகையை உற்றுநோக்கவைத்துள்ள பான் இந்தியத் திரைப்படம் ராதே ஷ்யாம். பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    Recommended Video

    Radhe Shyam Movie Audience | Prabhas | Pooja Hegde | Public Review

    யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று.

    இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படம் குறித்து ரசிகர்களின் கலவையான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    காளிகாம்பாள் கோயிலில் சூப்பர் தரிசனம்.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்த நயன்தாரா!காளிகாம்பாள் கோயிலில் சூப்பர் தரிசனம்.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்த நயன்தாரா!

    ராதே ஷ்யாம்

    ராதே ஷ்யாம்

    உலகையை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி நாயகன் பிரபாசை ரொமான்டிக் நாயகனாக மாற்றி உள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தில், கைரேகை ஜோதிடராக பிரபாஸ், தனது கையில் காதல் ரேகையே இல்லை என்கிறார். மருத்துவராக வரும் பூஜா ஹெக்டே பிரபாசை காதலிக்கிறார். படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் நிறைந்த காதல் படமாக உள்ளது.

    காதல் கவிதை

    காதல் கவிதை

    பாகுபலி, சாஹோ திரைப்படத்தில் மிரட்டி இருந்த பிரபாஸ் இப்படத்தில் காதலில் கரைந்து உருகி உள்ளார். ஜோதிட நம்பிக்கை, காதல், பிரிவு என அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் கொடுத்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்சாக பிரபாஸ் இருக்கிறார். விதியை யாராலும் மாற்ற முடியாது என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் பயணிக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் கைதட்டலை பெறும் அளவுக்கு கவிதை நயமாக இருந்தது.

    ஆமை வேகத்தில்

    ஆமை வேகத்தில்

    முற்பாதி நாயகியின் வாழ்வு பற்றியும் பிற்பாதி பிரபாஸின் வாழ்வு பற்றி கதை ஆமை வேகத்தில் நகர்ந்து செல்ல அலுப்பை ஏற்படுத்தி படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. சுவாரசியமான கதையை கையில் எடுத்த இயக்குநர் படத்தில் இருக்கும் லேகை குறைத்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. படம் முழுக்க ஜோசியம் பார்க்கும் பிரபாஸ் இந்த படத்தில் நடக்கலாமா வேண்டாமா என ஜோசியம் பார்த்து இருக்கலாம் என நக்கலாக கூறிவருகின்றனர்.

    கவரவில்லை

    கவரவில்லை

    கடைசியில் நம்பிக்கை வாழ்க்கை என்ற சத்யராஜின் வசனம் என்கேஜியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியீடு இப்படம் தமிழ் ரசிகர்களைக் கவராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Prabhas' Radhe Shyam Plus or minus Public Review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X