டிவி நிகழ்ச்சியில் பிரபாஸிடம் இப்படியா கேட்பார் அந்த இயக்குனர்: ச்சீ, ரொம்ப மோசம்

By Siva

Recommended Video

அனுஷ்கா மீதான காதல் பற்றி பிரபாஸ்- வீடியோ

மும்பை: காபி வித் கரண் நிகழ்ச்சியில் இயக்குனர் கரண் ஜோஹார் பிரபாஸிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டுள்ளார்.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபாஸ், ராணா மற்றும் இயக்குனர் ராஜமவுலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ராஜமவுலி

ராஜமவுலி

பிரபாஸ், ராணா ஆகியோரில் கெட்ட பய யார் என்று கரண் ராஜமவுலியிடம் கேட்டார். அதற்கு ராஜமவுலியோ சற்றும் யோசிக்காமல் பிரபாஸ் தான், ஆனால் அதை கண்டுபிடிக்க முடியாது என்றார். இதை கேட்ட ராணாவோ, நான் சிக்கிக் கொள்வேன், பிரபாஸ் அப்படி இல்லை என்று கூறினார்.

அனுஷ்கா

அனுஷ்கா

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா பிரபாஸ் என்று கரண் கேட்க அவர் உடனே இல்லை என்றார். அப்படி என்றால் நீங்களும், அனுஷ்காவும் காதலிப்பதாக கூறப்படுவது உண்மையா, இல்லையா என்று கரண் கேட்டார். பிரபாஸோ தெளிவாக, நீங்கள் தான் ஆரம்பித்தீர்கள் என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.

பிரபாஸ்

"friends with benefits" உண்டா என்று கரண் ஜோஹார் பிரபாஸிடம் கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். இங்கு அமர்ந்து கொண்டு பொய் சொல்லியுள்ளீர்களா என்றதும் பிரபாஸ் ஆமாம் என்றார். காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்து கேள்வி கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார் கரண்.

கவுரவத் தோற்றம்

கவுரவத் தோற்றம்

சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் அனுஷ்கா ஒரு குட்டி கதாபாத்திரத்தில் வருகிறாராம். பிளாஷ்பேக்கில் மட்டும் அனுஷ்கா வருவாராம். பிரபாஸும், அனுஷ்காவும் மீண்டும் ஒன்றாக நடிக்கப் போவதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ந்தாலும் அவரின் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கில் மட்டுமே வருவதை அறிந்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X