Prabhas: பிரபாஸுக்கு இத்தாலியில் இவ்வளவு பெரிய சொகுசு வில்லா இருக்கா? வாடகை மட்டும் இவ்வளவு வருதா?

ஹைதராபாத்: டார்லிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். சுமார் 100 கோடிக்கும் மேல் இவர் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு வெளிநாடுகளிலும் இடங்கள் மற்றும் வில்லாக்கள் வாங்கி போட்டுள்ளார் பிரபாஸ் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், அவற்றை வாடகைக்கு விட்டும் தனியாக சம்பாதித்து வருகிறார் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளன.

ஆதிபுருஷ் அவுட்: வரலாறு மற்றும் இதிகாசங்களை படமாக எடுத்து கல்லா கட்டி விடலாம் என டி சீரிஸ் நிறுவனத்தை பிரைன் வாஷ் செய்த இயக்குநர் ஓம் ராவத் பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் படத்தை இயக்கினார்.

Prabhas rent his own Luxurious Villa at Italy and earns 40 lakhs per month?

வரலாறு கால படங்களை எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை, பல சிக்கல்களும் பல கேள்விகளும் கிளம்பும் அதுவும் ராமாயணம் மற்றும் கடவுள் சார்ந்த படங்களை எடுக்கும் போது, பலரது நம்பிக்கைகள் சிதையாமல் எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், அவற்றை எல்லாம் அசால்ட்டாக எடுத்துக் கொண்டு கடைசியாக அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்குங்கள் என ப்ரமோஷனுக்காக ஜிம்மிக்ஸ் செய்தால், இப்படித்தான் மொத்த தியேட்டரும் காலியாக மாறும் என ரசிகர்கள் பதிலடி கொடுத்து விட்டனர்.

ஹாட்ரிக் தோல்வி: ராஜமெளலியின் பாகுபலி படத்தால் உலக ரசிகர்களை ஈர்த்த நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆகிய நிலையில், ராஜமெளலி இல்லாமல் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் என 3 படங்கள் ஃபிளாப் ஆகி அவருக்கு ஹாட்ரிக் தோல்வியை பரிசளித்துள்ளன.

ஹீரோவை விட அந்த படத்தை இயக்குவது யார் என்பது தான் முக்கியமே என்பதை ரசிகர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர். கதை நன்றாக இல்லையென்றால் ஹீரோ யாராக இருந்தாலும் ஃபிளாப் கன்ஃபார்ம் தான்.

எக்கச்சக்க சம்பளம்: பாகுபலி படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரலாற்று சாதனை செய்த நிலையில், பிரபாஸின் மார்க்கெட் எகிறியது. அடுத்தடுத்து பல நூறு கோடிகளில் உருவாகும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிரபாஸுக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர்.

இந்நிலையில், அடுத்ததாக சலார், ப்ராஜெக்ட் என இரு பெரும் படங்கள் திறமையான இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில், படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் மீண்டும் தனக்கு கம்பேக் கிடைக்கும் என பிரபாஸ் காத்திருக்கிறார்.

இத்தாலியில் வில்லா: இந்நிலையில், சம்பாதிக்கும் அதிகமான பணத்தைக் கொண்டு இத்தாலியில் நடிகர் பிரபாஸ் வில்லா ஒன்றை வாங்கி உள்ளார் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

மேலும், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனி ஜெட் விமானத்தில் தனது நண்பர்களுடன் அங்கே சென்று ஓய்வெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மாசத்துக்கு 40 லட்சம்: இத்தாலியில் பல கோடி போட்டு வாங்கி உள்ள அந்த வில்லாவை டூரிஸ்ட்களுக்கும், அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கும் நடிகர் பிரபாஸ் வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் அதன் மூலம் மாதம் 40 லட்சம் அவருக்கு கிடைப்பதாகவும் ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக நடிகர் பிரபாஸ் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுவரை அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X