Prabhas: சூர்யாவுக்கு எழுதிய கதையில் பிரபாஸ்... லோகேஷ் கனகராஜ் அதிரடி மூவ்... ரோலக்ஸ் முடிவு என்ன?
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக ரஜினியுடன் இணையவுள்ளார் லோகேஷ்.
தலைவர் 171, கைதி 2 என கைவசம் இரண்டு படங்கள் உள்ள நிலையில், விரைவில் பிரபாஸையும் இயக்கவுள்ளாராம். இந்தப் படம் சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை என்றும், அதில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவுக்கு எழுதிய கதையில் பிரபாஸ்: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், நான்கே படங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மெஹா ஹிட் படங்களை இயக்கிய லோகேஷுக்கு டாப் ஹீரோக்களிடம் இருந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன. கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது கடைசிப் படத்தை லோகேஷ் இயக்க வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது.
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்த லோகேஷ், அடுத்து ரஜினியுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. லியோ ரிலீஸானதும் 'தலைவர் 171' அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் தான் கார்த்தியின் கைதி 2ம் பாகத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ். இந்த இரண்டு படங்களுமே லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரபாஸ் தரப்பில் இருந்தும் லோகேஷுக்கு மிகப் பெரிய ஆஃபர் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பாகுபலிக்குப் பின்னர் பெரிதாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் பிரபாஸ், லோகேஷுடன் ஒரு சம்பவம் செய்ய காத்திருக்கிறாராம். இதுகுறித்து அடிக்கடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யாவுக்காக இரும்பு கை மாயாவி என்ற கதை எழுதியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த கூட்டணி கைதி படம் வெளியான போதே இணைந்திருக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் இரும்பு கை மாயாவி ப்ராஜெக்ட் தள்ளிப் போனது. அதன்பின்னர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்துக்கொடுத்தார் சூர்யா. அதனால், அவருக்காக ரோலக்ஸ் கேரக்டரையே தனி படமாக எடுக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.
இதுகுறித்து சூர்யாவே தனது ரசிகர்களுடனான சந்திப்பில் கூறியிருந்தார். அதேபோல், இரும்பு கை மாயாவி படம் உருவாகவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இரும்பு கை மாயாவி கதையில் பிரபாஸை நடிக்க வைக்க லோகேஷ் பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பிரபாஸுக்காக இன்னொரு கதையையும் லோகேஷ் ரெடி செய்துவிட்டாராம். லோகேஷுடன் சேர்ந்து சூர்யாவும் பிரபாஸின் பதிலுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











