பெண் அரசியல்வாதியுடன் சேர்த்து வைத்து பேசியது தான் எரிச்சலாக இருந்தது: பிரபாஸ்

By Siva

Recommended Video

சாகோ படத்தின் ரகசியத்தை சொன்ன பிரபாஸ் I Saaho Press Meet

ஹைதராபாத்: ஒரு பெண் அரசியல்வாதியுடன் சேர்த்து பரவிய வதந்தி தான் தன்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்ததாக பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2 படங்களை அடுத்து பிரபாஸுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

சாஹோ

சாஹோ

சாஹோ படத்தில் நடித்தபோது மன அழுத்தம் அதிகம் இருந்தது. அதற்கு இயக்குநர் சுஜீத்தோ, ஸ்க்ரிப்ட்டோ காரணம் இல்லை. ராஜமவுலியால் கிடைத்த அங்கீகாரமே காரணம். பாகுபலி படங்களை அடுத்து எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் உள்ளவர்கள் என் மீது அதிகம் பிரியம் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. குஜராத்தில் உள்ள குட்டீஸ் பாகுபலி பாடல்களை பாடுவதாக என் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

பெண் அரசியல்வாதி

பெண் அரசியல்வாதி

மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் பிரஷர் அதிகமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது. நான் சந்திக்காத ஒரு பெண் அரசியல்வாதியுடன் சேர்த்து வைத்து ஒரு முறை வதந்தி பரவியது. அது தான் நான் மிகவும் வெறுத்த, எரிச்சல் அடைந்த வதந்தி ஆகும்.

அனுஷ்கா

அனுஷ்கா

நானும், அனுஷ்காவும் நண்பர்கள். நாங்கள் பாகுபலி படங்களில் நடித்தபோது நான்கு ஆண்டுகள் சேர்ந்து வேலை பார்த்தோம். மக்களுக்கு கதையும், தேவசேனா கதாபாத்திரமும் பிடித்திருந்தது. சக நடிகையுடன் சேர்த்து வைத்து வதந்தி கிளம்புவது வழக்கமான ஒன்று. ஆனால் இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதை மறைக்க முடியாது. அப்படி ஏதாவது இருந்தால் அதை ஏன் நாங்கள் மறைக்க வேண்டும்?

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

சாஹோ படப்பிடிப்பில் முதல் முறையாக ஷ்ரத்தா தெலுங்கில் பேசியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பயிற்சி எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். தெலுங்கு படத்தில் நடிப்பது முதல் முறை என்பதால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். பாகுபலி படத்தை தமிழில் ஷூட் செய்தபோது நானும் அப்படித் தான் இருந்தேன் என்றார் பிரபாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X