சமந்தாவுடன் ஏன் நடிக்கவில்லை.. நடிகர் பிரபாஸ் இப்படியொரு விளக்கம்.. ஆனால், அந்த விஷயம் இடிக்குதே?

ஹைதரபாத்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், சமந்தாவுடன் தான் ஏன் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Recommended Video

Samantha 32nd Birthday Celebration | Lock Down Birthday, ChaySam

சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் களை கட்டி வருகிறது. மறுபுறம் பாகுபலி 2ம் பாகம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

டோலிவுட்டில்

டோலிவுட்டில்

தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக நடிகை சமந்தா வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலருடன் நடித்த சமந்தா, டோலிவுட்டில் நாக சைதன்யா, நானி, ராம் சரண், பவன் கல்யாண், மகேஷ் பாபு என பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பல நடிகைகளுடன்

பல நடிகைகளுடன்

அதே போல நடிகர் பிரபாஸ், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே, திரிஷா மற்றும் பாலிவுட் நாயகியான ஷ்ரத்தா கபூர் என பலருடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனால், நடிகை சமந்தாவுடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.

சாஹோவில் சமந்தா

சாஹோவில் சமந்தா

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் கடந்த ஆண்டு வெளியான சாஹோ 400 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூருக்கு முன்னதாக நடிகை சமந்தா தான் நடிக்க தேர்வானார் என்ற வதந்திகள் அந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியானபோது வைரலானது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்நிலையில், சமந்தாவுடன் பிரபாஸ் நடிக்காததற்கான காரணத்தை அண்மையில் விளக்கி உள்ளார். சமந்தாவின் நடிப்பு தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், ஏன் தாங்கள் இருவரும் ஒன்றிணைந்து நடிக்கவில்லை என்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது சமந்தாவின் உயரம் தான் என பிரபாஸ் கூறியுள்ளார்.

ஹைட் பிரச்சனை

ஹைட் பிரச்சனை

பாகுபலி நடிகர் பிரபாஸின் உயரம் 1.83 மீட்டர். ஆனால், நடிகை சமந்தாவின் உயரம் வெறும் 1.58 மீட்டர் தான். இந்த ஹைட் பிரச்சனை காரணமாகத் தான் அவருடன் இணைந்து நடிக்கவில்லை என நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார். பிரபாஸ் 20 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவின் உயரம் 1.68 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

நடிகர் பிரபாஸ் இப்படியொரு விளக்கத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கோபமடைந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர்கள், 1.57 மீட்டர் உயரம் கொண்ட நடிகை நயன்தாராவுடன் மட்டும் 2007ம் ஆண்டு வெளியான யோகி படத்தில் எப்படி நடித்தீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

உங்களைவிட உயரமானவர்

உங்களைவிட உயரமானவர்

சினிமாவில் உயரமான நடிகர்கள், உயரமற்ற நடிகைகள் என்ற பாகுபாடுகளை பார்த்து யாரும் நடிப்பதில்லை என்றும், திறமைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் விவாதம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரபாஸை விட உயரமான நடிகர் விஷாலுடன் (1.85 மீட்டர்) இரும்புத்திரை படத்தில் பொருத்தமான ஜோடியாகவே நடிகை சமந்தா நடித்திருந்ததையும் மேற்கோள் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X