சிவராத்திரி ஸ்பெஷல்...பிரபாசின் ஆதிபுருஷ் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...எப்போ தெரியுமா?

சென்னை : சிவராத்திரி ஸ்பெஷலாக பிரபாஸ் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரிலீஸ் தேதியுடனான போஸ்டரை பிரபாசும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராமாயணத்தை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கும் இந்த படத்தை டி சீரிஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Retrophiles இணைந்து தயாரித்து வருகின்றன. பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கும் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 ஆதிபுருஷ் உருவாக இப்படி ஒரு கதையா

ஆதிபுருஷ் உருவாக இப்படி ஒரு கதையா

1996 ல் ஜப்பான் மொழியில் உருவாக்கப்பட்ட Ramayana : The Legend of Prince Rama என்ற படம் தான் ஆதிபுருஷ் படம் உருவாக காரணமாக அமைந்த படம். இந்த படத்தை பார்த்து விட்டு தான், மாடர்ன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராவணனின் கோணத்தில் இருந்து ராமாயணத்தை படமாக இயக்கினால் எப்படி இரக்கும் என்ற ஐடியா ஓம் ராவத்திற்கு வந்ததாம். லாக்டவுன் சமயத்தில் படத்தின் முழு கதையையும் எழுதி முடித்து விட்டாராம் ஓம் ராவத். கதையை கேட்டதும் பிரபாசும், தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக ஓகே சொல்லி விட்டார்களாம்.

சீதா கேரக்டருக்கு இத்தனை பேரா

சீதா கேரக்டருக்கு இத்தனை பேரா

ஆரம்பத்தில் பிரபாஸ் கேரக்டரின் பெயர் ராமா என்றே வைக்கப்பட்டதாம். பிறகு தான் ராகவன் என மாற்றி உள்ளனர். ஏற்கனவே ஓம் ராவத் இயக்கிய Tanhaji படத்தில் வில்லன் ரோலில் நடித்ததால் இந்த படத்திலும் சைஃப் அலிகானையே வில்லன் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டதாம். சீதா கேரக்டரில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி, அனுஷ்கா சர்மா, கியாரா அத்வானி, கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகளில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கடைசியில் தான் கீர்த்தி சனோனனை முடிவு செய்தார்களாம்.

தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்

தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்

இந்தி மற்றும் தெலுங்கில் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. இந்திய சினிமாவிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு வரும் இது தான். 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு, 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி இந்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Recommended Video

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்: கன்னியாகுமரியில் எங்கும் ஒலித்த கோவிந்தா... கோபாலா முழக்கம்
சிவராத்திரியில் புதிய ரிலீஸ் தேதி

சிவராத்திரியில் புதிய ரிலீஸ் தேதி

ஆனால் லால் சிங் சாந்த் படத்தின் ரிலீஸ் காரணமாக ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிக்கப்பட்டது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை ஆதிபுருஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ம் ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி உலகம் முழுவதும் ஆதிபுருஷ் 3டி வடிவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X