Adipurush Public Review: படம் நல்லா இருக்கா இல்லையா? ஒரு தடவ பார்க்கலாமா? பொதுமக்கள் கருத்து என்ன?

சென்னை: இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில், பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், சைஃப் அலி கான் நடிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.

கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், பலவிதமான மாற்றங்களை செய்து மீண்டும் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இன்று வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து பொதுமக்களின் கருத்தை இப்போது பார்க்கலாம்.

Prabhass Adipurush Public Review

ஆதிபுருஷ்: ராமாயணக்கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் கதையின் ஒரு பகுதி இதில் படமாக்கப்பட்டுள்ளது. இதில், ராமர் பிரபாஷ், மனைவி சீதை (கிருத்தி சனோன்), தம்பி லட்சுமணனுடன் (சன்னி சிங்) 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார். அப்போது ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் காதலை ஏற்க மறுத்து அவரது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.

படத்தின் கதை: இதனால், ராமனை பழிவாங்க முனிவர் வேஷம்போட்டு பூண்டு சீதையை கடத்திச் சென்றுவிடுகிறார் இலங்கை அரசனான ராவணன் (சைஃப் அலி கான்). சுக்கிரீவனின் வானரப் படை மற்றும் அனுமனின் (தேவ்தத்தா நாகே) உதவியுடன் இலங்கைக்குச் சென்று சீதையை எப்படி மீட்டார் என்பதே ஆதிபுருஷ் படத்தின் கதை.

பார்க்க வேண்டிய படம்: இன்று வெளியான படத்தைப்பார்த்த ரசிகர்கள் பலர், ராமாணம் நமக்கு தெரிந்த கதையாக இருந்தாலும் இந்த படத்தை பெரிய நடிகர்களை வைத்து எடுத்து இருக்கிறார்கள், படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம், குழந்தைகளோடு இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் பிடிக்கும் என்றார்.

ரொம்ப நீளம்: முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர் ஒருவர், படம் தொடங்கும் போது விறுவிறுப்பாக இருந்தது. ஆனால், இடைவேளைக்குப்பிறகு படம் விறுவிறுப்பு குறைந்துவிட்டது. அதாவது சண்டை காட்சி போர் நடக்கும் காட்சி ரொம்ப நீளமாக இருந்தது. அதை குறைத்து இருந்தால், போர் அடித்து இருக்காது என்றார்.

ஒன்னுமே இல்லை: அதே படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஒரு சினிமா பிரியர், 500கோடி செலவு செய்து படத்தை எடுத்து இருப்பதாக கூறினார்கள். ஆனால், படத்தில் ஒன்னுமே இல்லை பாதியில் தூங்கிவிட்டேன் என்றார். நிறைய அனிமேஷன் படத்தை பார்த்து இருக்கிறேன். அதைவிட இந்த படம் செம மொக்கையா இருக்கு. இப்படி ஒரு படத்தை பார்ப்பதற்கு சன்டிவியில் ராமாயணத்தையே பார்க்கலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X