»   »  ஏன் பிரபாஸ், ஏன் இப்படி ஆகிட்டீங்க: ரசிகர்கள் அதிருப்தி

ஏன் பிரபாஸ், ஏன் இப்படி ஆகிட்டீங்க: ரசிகர்கள் அதிருப்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபாஸ் தாடி, மீசை இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபாஸ் என்றதுமே பாகுபலி படம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பாகுபலி படத்தில் மீசை, லேசான தாடியுடன் கம்பீரமாக இருந்தார் பிரபாஸ்.

பாகுபலி 2 படத்தை முடித்த பிறகு அவர் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றார்.

பிரபாஸ்

பிரபாஸ்

அமெரிக்காவில் இருந்து ஊர் திரும்பியுள்ள பிரபாஸ் தாடி, மீசை இல்லாமல் மொழுக்கென்று இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தாடி, மீசையுடன் கம்பீரமாக இருந்த பிரபாஸ் இப்படி மொழுக்கென்று இருப்பதை பார்த்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரபாஸ் ஒன்றும் வேண்டும் என்று இப்படி செய்யவில்லையாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

பாகுபலி, பாகுபலி 2 இமாலய வெற்றிக் பிறகு பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அமெரிக்கா சென்றபோது எங்கு சென்றாலும் மக்கள் பிரபாஸை அடையாளம் கண்டு கூட்டமாக கூடியுள்ளனர்.

மாறுவேடம்

மாறுவேடம்

தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க தாடி, மீசையை எடுத்துவிட்டு தொப்பியும், கண்ணாடியும் அணிந்து அமெரிக்காவில் ஊர் சுற்றியுள்ளார் பிரபாஸ்.

English summary
Prabhas has removed his moustache and beard completely and looks unrecognisable in his new clean shaven look! This new look has disappointed his fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil