ராதே ஷ்யாம் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் இதுதானாம்? வலிமை, எதற்கும் துணிந்தவன் வசூல் ஏன் சொல்லல?
சென்னை: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் மார்ச் 11ம் தேதி வெளியான பிரம்மாண்ட காதல் திரைப்படம் ராதே ஷ்யாம் முதல் நாளில் எத்தனை கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது என அதன் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் அனைத்தும் ராதே ஷ்யாம் சரியாக வசூல் செய்யவில்லை என தகவல் தெரிவித்தன.
ஆனால், மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் அடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.

79 கோடி ரூபாய்
ராதே ஷ்யாம் திரைப்படம் முதல் நாளில் டோலிவுட்டிலேயே வெறும் 30 கோடி தான் வசூல் செய்ததாக டிராக்கர்கள் தகவல்களை வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக படம் 45 முதல் 50 கோடி வரை தான் கலெக்ட் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் முதல் நாளிலேயே 79 கோடி ரூபாயை உலகளவில் கலெக்ட் செய்திருப்பதாக யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் முறை
கொரோனா பரவல் காரணமாக திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகமல் கஷ்டப்பட்டு இருந்த நிலையில், போஸ்ட் பாண்டமிக்கிற்கு பிறகு முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் ராதே ஷ்யாம் தான் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் ஹேப்பி
டார்லிங் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்திற்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில், அப்செட் ஆகியிருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் அதிகாரப்பூர்வமாக 79 கோடி ரூபாய் வந்ததை அறிந்து கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

100 கோடி கிளப்
முதல் நாளிலேயே 79 கோடி ரூபாய் வசூலை ராதே ஷ்யாம் ஈட்டியிருக்கும் நிலையில், இரண்டாவது நாளிலேயே 100 கோடி கிளப்பில் இந்த படம் அசால்ட்டாக இணைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் முதல் வார இறுதியில் எவ்வளவு வசூல் செய்யப் போகுது என பார்க்க டோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

வலிமை வசூல் சொல்லலயே
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 36 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியதாக டிராக்கர்கள் மட்டுமே சொல்லி உள்ள நிலையில், அது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கூறவில்லை. ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி படம் எல்லாம் 100 கோடி தாண்டியதை ஆலியா பட்டே கொண்டாடி வரும் நிலையில், 100 கோடியை தாண்டியதா? 200 கோடியை தொட்டதா? என எதையுமே போனி கபூர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

சன் பிக்சர்ஸ் கூட
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் நல்ல வெற்றியை பெற்றது என அறிவித்த சன் பிக்சர்ஸ் கூட முதல் நாளில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என அறிவிக்கவில்லை. அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட புஷ்பா பாக்ஸ் ஆபிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











