மகாசிவராத்திரிக்கு பிரபாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. Project K ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா?
ஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்து வரும் Project K திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அதன் பிறகு மெகா பட்ஜெட் ஹீரோவாகவே மாறிவிட்டார்.
ஆனால், பாகுபலி படங்கள் தந்த வெற்றி அளவுக்கு இன்னமும் பிரபாஸ் படங்கள் ஹிட் அடிக்காமல் சொதப்பி வருவதால் டார்லிங் ரசிகர்கள் வெயிட்டான ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் பாகுபலி
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் என இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தன. பாகுபலி 2 அதிகபட்சமாக 1800 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆனார்.

200 கோடிக்கு கம்மி கிடையாது
பாலிவுட்டில் உருவான சாஹோ, ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ் படங்களின் பட்ஜெட் இனிமேல் 200 கோடிக்கு கம்மி கிடையாது என்கிற ரேஞ்சுக்கே மாறி விட்டது. சாஹோ படம் சொதப்பிய நிலையில், கடந்த ஆண்டு வெளியான ஹை பட்ஜெட் ராதே ஷ்யாம் படமும் ஃபிளாப் ஆகி பிரபாஸ் ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

தள்ளிப்போன ஆதிபுருஷ்
இந்த ஆண்டு ஜனவரிக்கே ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால், அந்த படத்தின் டீசர் காட்சியை பார்த்து விட்டு நாடு முழுவதும் கிளம்பிய ட்ரோல்கள் காரணமாக படத்தை மீண்டும் ரீ எடிட் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிபுருஷ் படமும் பிரபாஸுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தருமா என்பது சந்தேகம் தான்.

சலார் காப்பாற்றும்
கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. பிரபாஸின் இமேஜை நிச்சயம் அந்த படம் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் சலார் படத்தில் நடித்து வருகின்றனர்.

நடிகையர் திலகம் இயக்குநர்
கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்றும் வெளியான படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படமும் பிரம்மாண்ட பொருட்செலவில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாசிவராத்திரி ட்ரீட்
அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே திரைப்படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மகாசிவராத்திரியை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் அறிவித்து பிரபாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆதிபுருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே என அடுத்தடுத்து ரசிகர்களை சில்வர் ஸ்க்ரீனில் மகிழ்விக்க காத்திருக்கிறார் பிரபாஸ்.


Click it and Unblock the Notifications