2ம் நாளில் ராதே ஷ்யாம் வசூல் இப்படி பாதியா குறைஞ்சிடுச்சே.. அப்போ இதுக்கு மேல அவ்ளோ தானா?

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தின் 2ம் நாள் வசூலையும் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 நாட்களிலேயே படத்தின் வசூல் 100 கோடியை கடந்து விட்டதை கொண்டாடுவதா? அல்லது 2வது நாளிலேயே படத்தின் வசூல் பாதியாக குறைந்து விட்டதை எண்ணி வருத்தப்படுவதா என பிரபாஸ் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

டோலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைப்புக்காக ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை சொல்லி வருகின்றன என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

டிசாஸ்டர்

டிசாஸ்டர்

நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் விமர்சன ரீதியாக சொதப்பிய நிலையில், ராதே ஷ்யாம் படத்தை பல விமர்சகர்களும் டிசாஸ்டர் என்றே கழுவி ஊற்றி விட்டனர். கதையே இல்லாத படத்துக்கு ஏன் 300 கோடி பட்ஜெட்டை செலவு செய்தனர் என்கிற கேள்வியைத் தான் படம் பார்த்த அனைவரும் கேட்டு வருகின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

ராதே ஷ்யாம் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவிலேயே 40 கோடி கூட வந்திருக்காது என டிராக்கர்கள் கணித்த நிலையில், அதிரடியாக முதல் நாளில் 79 கோடி ரூபாயை அந்த படம் கலெக்ட் செய்ததாக யூவி கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.

2 நாட்களில் 100 கோடி

2 நாட்களில் 100 கோடி

இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் 2ம் நாள் வசூலையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியான 2 நாட்களிலேயே 119 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக யூவி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ள நிலையில், வசூல் ஏன் குறைந்து விட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதியாக குறைந்த வசூல்

பாதியாக குறைந்த வசூல்

வேலை நாளான வெள்ளிக்கிழமையே 79 கோடி ரூபாயை உலகளவில் குவித்த பிரபாஸின் ராதே ஷ்யாம் விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று வெறும் 40 கோடிகள் மட்டுமே உலகளவில் எப்படி வசூல் ஈட்டியது என கேள்வி எழுப்பி வருகின்றனர். ராதே ஷ்யாம் படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் இரண்டாம் நாளில் பாதியாக குறைந்து விட்டதா என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஃபேக் ரிப்போர்ட்

ஃபேக் ரிப்போர்ட்

டோலிவுட் படங்கள் தொடர்ந்து பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை கூறி வருவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். இரண்டாம் நாளும் அதிகப்படியான வசூலை சொல்லி விட்டால் எங்கே பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என நினைத்தே யுவி கிரியேஷன்ஸ் இந்த வசூலை சொல்லி இருப்பதாகவும், இதே சிக்கல் காரணமாகத்தான் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் வாயை திறப்பதே இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X