ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ்? அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்!

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

5 மொழிகளில்..

5 மொழிகளில்..

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இடையில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் தொடங்கியது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. ஏற்கனவே ஜூலை 30 ஆம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானதால் ரிலீஸ் தேதியும் தள்ளி போனது.

பிரபாஸ் அறிவிப்பு

பிரபாஸ் அறிவிப்பு

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவான நடிகர் பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜனவரி 14 ல் ரிலீஸ்

ஜனவரி 14 ல் ரிலீஸ்


அதன்படி வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X