காதலர் தினத்துக்கான சரியான கிஃப்ட்.. பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகி உள்ள நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தற்போது அந்த படத்தில் இருந்து சூப்பரான ஒரு சின்ன டீசரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் ரொமான்டிக் காட்சி நிச்சயம் புல்லரிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

உலக காதலர் தினம்

உலக காதலர் தினம்

ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினமான இன்று காதல் ஜோடிகள் தங்கள் அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கம். கடந்த ஒரு வார காலமாகவே காதலர் தின கொண்டாட்டம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்துக்கான சரியான காதல் பரிசாக நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் க்ளிம்ஸ் வெளியாகி உள்ளது.

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்

பாகுபலி படங்கள் மற்றும் சாஹோ என பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் பிரபாஸ், அடுத்ததாக இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடித்துள்ள படம் தான் ராதே ஷ்யாம். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் இன்னும் சில மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

ரோமியோன்னு நினைப்பா

வெளிநாட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. காதல் படமாக இருந்தாலும் பிரபாஸ் நடிப்பதால், அதிலும் பிரம்மாண்டம் இருக்கத் தானே செய்யும். உனக்கென்ன ரோமியோன்னு நினைப்பா என நாயகி பூஜா கேட்க, ச்சே.. அவரு காதலுக்காக செத்துட்டாரு.. எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை என பிரபாஸ் சொல்லும் வசனம் வேற லெவல்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரிசையாக பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 30ம் தேதி உலகளவில் ரதே ஷ்யாம் படத்தை ரிலீஸ் செய்கிறது படக்குழு.

கேஜிஎஃப் உடன் போட்டி

கேஜிஎஃப் உடன் போட்டி

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வரும் ஜூலை 16ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அதிலிருந்து இரு வாரங்கள் கழித்து பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியாகிறது. 2 வாரங்கள் மட்டுமே இருப்பதால் நிச்சயம் இந்த இரண்டு படங்களுக்கு இடையே ஒரு பயங்கர கிளாஷ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X