க்ளைமாக்சுக்கு மட்டுமே ரூ.75 கோடியா? பட்டையை கிளப்பும் பிரபாஸ் படம்
ஐதராபாத் : பிரபாசின் ராதே ஷ்யாம் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்ததாக சலார் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை பாகுபலி படத்தில் இணைந்து பணியாற்றிய பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார்.
படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்திற்காக 350 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ்
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் மூலம் இந்திய அளவில் புகழின் உச்சத்தை அடைந்துள்ளார் பிரபாஸ். அந்தப் படங்களில் மிரட்டலான நடிப்பை அவர் வழங்கினார். மற்ற நடிகர், நடிகைகள் படத்தில் சிறப்பாக நடித்திருந்தபோதிலும் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

கேரியரில் பெஸ்ட்
அந்தப் படத்தையடுத்து அடுத்தத்த படங்களில் அவர் நடித்திருந்த போதிலும் இந்தப் படம் அவருடைய கேரியரில் பெஸ்ட்டாக அமைந்துள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக பூஜா ஹெக்டேவுடன் அவர் நடித்துள்ள காதல் படமாக ராதே ஷ்யாம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது.

சலார் படம்
இதையடுத்து ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பிரபாஸ் சலார் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகவுள்ளது. மேலும் பான் இந்தியா ஸ்டாராகவுள்ள பிரபாசின் இந்தப் படம் தமிழ், இந்தி, மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் அப்டேட்
படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழு சார்பில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஸ்ருதிஹாசன் பிரபாசுக்கு ஜோடியாகியுள்ள நிலையில், சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர் ஒன்று வெளியானது.

க்ளைமாக்சிற்கு ரூ.75 கோடி
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே 75 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென டேங்குகள், விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட க்ளைமாக்ஸ்
பிரம்மாண்டமான வகையில் இந்தக் காட்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளார். படத்தில் ஜெகபதி பாபு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சில் வெளியாகும் படம்
படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கவுள்ளார். பிரபாசின் முந்தைய படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கைக்கொடுக்காத நிலையில் தற்போது அவர் ராதே ஷ்யாம் படத்தை எதிர்பார்த்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











