கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!

By

ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் தொடக்க விழா, ஐதராபாத்தில் இன்று காலை நடந்தது.

பாகுபலி படத்துக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகி வருகின்றனர்.

அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது.

பீரியட் காதல்

பீரியட் காதல்

இப்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதற்கிடையே இந்தி இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

ராமாயணக் காவியம்

ராமாயணக் காவியம்

இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தி, தெலுங்கில் 3டி-யில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிட இருக்கின்றனர்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இதில் வில்லனாக சைஃப் அலிகான் நடிக்கிறார். இதையடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார், பிரபாஸ். அதில் தீபிகா படுகோன் ஹீரோயின். இந்தப் படம் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. இதற்கிடையே, கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஹொம்பாளே பிலிம்ஸ்

ஹொம்பாளே பிலிம்ஸ்

பிரமாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதை கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பூஜை, ஐதராபாத்தில் இன்று நடந்தது.

கே.ஜி.எஃப் ஹீரோ

கே.ஜி.எஃப் ஹீரோ

இந்த பூஜையில், கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத்நாராயண், இயக்குனர் ராஜமவுலி, கே.ஜி.எஃப் ஹீரோ யஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடைசி வாரம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X