’ஷேட்ஸ் ஆப் சாஹூ’... பிரபாஸுக்கு ரசிகர்கள் கொடுத்த 'டிரெண்டிங்' பர்த்டே கிஃப்ட்!
பிரபாஸின் ’ஷேட்ஸ் ஆப் சாஹூ’ இணையத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.
சென்னை: 'ஷேட்ஸ் ஆப் சாஹூ' என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிரபாஸின் சாஹு பட முன்னோட்டக்காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். அந்தவகையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் 'ஷேட்ஸ் ஆப் சாஹூ (Shades of Saaho) எனும் பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வீடியோவை இரண்டு நாட்களில் சுமார் 86 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாகியுள்ளது இந்த வீடியோ.

பிரமாண்ட படம் சாஹூ
1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "சாஹூ" மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது. பாகுபலியில் போர்க்களக் காட்சிகளில் அதகளம் செய்த பிரபாஸ், இப்படத்திலும் ஆக்சன் காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹூ ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.

சுஜீத் இயக்கம்
இயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











