பிரபல சினிமா இயக்குனருக்கு திருமண நிச்சயதார்த்தம்.. காதலியை கரம் பிடிக்கிறார்.. நடிகர்கள் வாழ்த்து!

By

சென்னை: பிரபல இளம் இயக்குனரின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. இதையடுத்து நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Baahubali completed 3 years | Prabhas | Rana Duggubati | Rajamouli

சர்வானந்த், சிரத் கபூர், அதிவிசேத், சம்பத், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ரன் ராஜா ரன்.

இதை இயக்கியவர் சுஜித். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது.

ஆக்‌ஷன் அதிரடி

ஆக்‌ஷன் அதிரடி

இதே நிறுவனத்துக்காக பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கிய படம், சாஹோ. பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த ஆக்‌ஷன் அதிரடி படத்தில், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

லூசிஃபர் ரீமேக்

லூசிஃபர் ரீமேக்

இதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் சுஜித். இது பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக். இதில் பிரபல ஹீரோ மோகன்லால், மஞ்சுவாரியர், இந்திரஜித், ஜான் விஜய் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதன் கதையில், தெலுங்கு ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்ய உள்ளனர்.

பல் மருத்துவர்

பல் மருத்துவர்

இதற்கிடையே, இயக்குனர் சுஜித், பிரவள்ளிகா என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். பிரவள்ளிகா, பல் மருத்துவர். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் பேசியுள்ளனர்.

நெருங்கிய சொந்தங்கள்

நெருங்கிய சொந்தங்கள்

இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் எளிமையாக நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிச்சயதார்த்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X