பிரபாஸின் சாஹோ பட இயக்குனருக்கு காதல் திருமணம்.. பல் மருத்துவரான மணமகள், ஸ்கிரிப்ட் டைரட்டராமே!

By

சென்னை: பிரபாஸின் 'சாஹோ' பட இயக்குனருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

சர்வானந்த், சிரத் கபூர், அதிவிசேத், சம்பத், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ரன் ராஜா ரன்.

இதை இயக்கியவர் சுஜித். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது.

Prabhas Saaho director to enter wedlock soon

இதே நிறுவனத்துக்காக பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கிய படம், சாஹோ. பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த ஆக்‌ஷன் அதிரடி படத்தில், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் சுஜித். இது பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்.

இயக்குனர் சுஜித், பிரவள்ளிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பல் மருத்துவரான அவர் ஸ்கிரிப்ட் டைரட்டர் என்றும் நானி நடித்துள்ள படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் பேசியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க இருப்பதாகவும் பிறகு திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X