ஓ.கே.சொல்லலையாம்.. பிரபாஸ் படத்தில் நடிக்க பிரபல ஹீரோவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசிய நிறுவனம்!

By

சென்னை: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.20 கோடி வரை சம்பளம் தர முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மார்கெட் வேற லெவலில் இருக்கிறது.

அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகி வருகின்றன.

காதல் கதை

காதல் கதை

அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. அடுத்து இப்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது.

ராமாயணக் காவியம்

ராமாயணக் காவியம்

இதற்கிடையே இந்தி இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

காவிய கதாபாத்திரம்

காவிய கதாபாத்திரம்

இந்தி, தெலுங்கில் 3டி-யில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார், பிரபாஸ். அதில் தீபிகா படுகோன் ஹீரோயின். இந்தப் படம் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

பிரசாந்த் நீல்

பிரசாந்த் நீல்

இதற்கிடையே, கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதை கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Recommended Video

ரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
மோகன் லால்

மோகன் லால்

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பிரபல மலையாள ஹீரோ, மோகன்லாலிடம் பேசியுள்ளனர். இதற்காக அவருக்கு சம்பளமாக ரூ. 20 கோடி வரையில் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் இதுவரை ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X