Salaar Box Office: சலார் பாக்ஸ் ஆபிஸ் சர்ச்சை.. அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக ரவுண்டாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். ஷாருக்கானின் டங்கி திரைப்படத்துடன் போட்டியாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி வெளியானது சலார்.
டங்கி படத்தை வசூல் ரீதியாக சலார் முறியடித்த நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஃபேக் என ஷாருக்கான் ரசிகர்கள் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்தனர். ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு வசூல் அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது சர்ச்சைகள் வெடித்துள்ள சூழலில் வசூல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓவர் பில்டப்: கேஜிஎஃப் படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலார் திரைப்படம் ஓவர் பில்டப் என விமர்சிக்கப்பட்டாலும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் சலார் படத்தையும் பிரபாஸையும் கொண்டாடி வருகின்றனர்.
ஷாருக்கான் ரசிகர்கள் செஞ்ச பஞ்சாய்த்து: சலார் படத்தின் வசூலில் மோசடி நடைபெற்று இருப்பதாகவும், தியேட்டர்கள் காலியாக இருந்தாலும் புக் மை ஷோவில் படம் ஃபுல் என காட்டுகிறதே எப்படி என ஷாருக்கான் ரசிகர்கள் நேற்று சோஷியல் மீடியாவில் பிரபாஸ் படத்துக்கு எதிராக பெரிய பிரச்சாரத்தை செய்தனர். மேலும், கிறிஸ்துமஸ் வின்னர் டங்கி தான் என்றும் சலார் ஃபிளாப் என்றும் சண்டை போட்டு வந்தனர்.
டாங்கியை உதைத்த சலார்: பதிலுக்கு பிரபாஸ் ரசிகர்கள் டங்கி படத்தை டாங்கியை உதைத்த சலார் என ஹாஷ்டேக் உருவாக்கி பதிலடி கொடுத்தனர். சலார் படம் விமர்சனங்களை கடந்து அனிமல் படம் போல மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவது தான் உண்மை என்று ஏகப்பட்ட ட்வீட்கள் பறந்தன. பிரபாஸின் வளர்ச்சியால் ஷாருக்கான் ஷாக் ஆகிவிட்டார் என்றும் அதனால் தான் அவரது ஆட்கள் இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் கூறினர்.
500 கோடி வசூல்: பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக சொதப்பி வந்த நிலையில், சலார் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொண்டு 500 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
பிரபாஸ் மார்க்கெட் உச்சம்: சலார் படத்தைத் தொடர்ந்து கல்கி, மாருதி, ஸ்பிரிட் மற்றும் சலார் 2ம் பாகம் என வரிசையாக இன்னும் பல ஆண்டுகளுக்கு பிரபாஸ் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என தெரிகிறது. மேலும் தனது சம்பளத்தையும் 200 கோடி வரை பிரபாஸ் அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சலார் படம் 500 கோடி வசூலை அடைந்த நிலையில், இந்த வாரமும் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், 2ம் வார இறுதியிலும் வசூல் வேட்டையை நடத்தும் என்றும் 700 கோடி வசூல் வரை செல்லும் என்றும் 1000 கோடி வசூல் என்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











