Prabhas: ஆதிபுருஷ் பிளாக்பஸ்டர் ஆகணும் பெருமாளே.. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்!

ஹைதராபாத்: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.

இந்நிலையில், டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு பல கோடி போட்டு மறுபடியும் எடுத்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் பெருமாளே என பிரபாஸ் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது.

Prabhas seeks blessings at Tirumala for Adipurush Final Trailer launch

ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீடு: தானாஜி படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கிருத்தி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள ராமாயண லைவ் ஆக்‌ஷன் படம் தான் ஆதிபுருஷ்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று மாலை படத்தின் டிரைலர் வெளியாகிறது.

Prabhas seeks blessings at Tirumala for Adipurush Final Trailer launch

திருப்பதியில் பிரபாஸ்: ஆதிபுருஷ் டிரெய்லருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும் என நடிகர் பிரபாஸ் படக்குழுவினருடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

திருப்பதியில் நடிகர் பிரபாஸ் வரிசையில் நின்று பெருமாளை காண காத்திருக்கும் புகைப்படங்களை தற்போது தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

Prabhas seeks blessings at Tirumala for Adipurush Final Trailer launch

பட்டு அங்கவஸ்த்திரத்துடன் பிரபாஸ்: ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்துள்ள நம்ம பாகுபலி பிரபாஸ் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க சென்ற நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு பட்டு அங்கவஸ்திரத்தை அணிவித்து ராஜ மரியாதையுடன் பெருமாளை காண பாதுகாப்பு அதிகாரிகளுடன் அழைத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே என அடுத்தடுத்து பல நூறு கோடி படங்களில் நடித்து வரும் டார்லிங் பிரபாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவே திணறும் படி அவற்றை காட்டுத் தீ போல ஷேர் செய்து வருகின்றனர்.

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி: இந்த ஆண்டு பொங்கலுக்கே ஆதிபுருஷ் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய நிலையில், முதலில் வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் இது என்னடா அனிமேஷன் படம் என கலாய்த்துத் தள்ளினர்.

ஆதிபுருஷ் படம் கோச்சைடையான் போல லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாக்கப்பட்ட நிலையில், சிஜியும் அதே போல படு மோசமாக இருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மீண்டும் நூறு கோடி மதிப்பில் போஸ்ட் புரொடக்‌ஷன் செய்யப்பட்டு தற்போது புத்தம் புது பொலிவுடன் வரும் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X