»   »  காதலி என கிசுகிசுக்கப்படும் அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்

காதலி என கிசுகிசுக்கப்படும் அனுஷ்காவுடன் சீனா செல்லும் பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸும், அனுஷ்காவும் ஜோடியாக சீனா செல்ல உள்ளார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ.1,700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அனுஷ்கா, பிரபாஸ் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

இருவரையும் சேர்ந்து பார்த்தால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள்.

சீனா

சீனா

பாகுபலி 2 படத்தை சீனாவில் ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்கள். இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸும், அனுஷ்காவும் சீனா செல்கிறார்கள்.

தங்கல்

தங்கல்

ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் கடந்த மாதம் ரிலீஸாகி ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. தங்கலின் இந்த வசூல் சாதனையை பாகுபலி 2 முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி

பாகுபலி

முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு பாகுபலி படம் சீனாவில் 6 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டது. தற்போது பாகுபலி 2 படத்தை அதை விட பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

திருமணம்

திருமணம்

பிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிரபாஸ் சினிமா துறையில் இல்லாத பெண்ணை மணக்கப் போவதாக கூறப்படுகிறது.

English summary
Prabhas is all set to leave for China with Anushka Shetty to promote Baahubali 2 there. Baahubali 2 will be released in China in july.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil