ராமர் அவதாரத்தில் பிரபாஸ்..பாகுபலியை மிஞ்சும் படைப்பு..ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஹைதராபாத் : நடிகர் பிரபாஸ் நடிக்கும் அதிபுரூஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஓம் ராவத்.

ஆதிபுருஷ்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வில்லுடன் பிரபாஸ்
அந்த போஸ்டரில் பிரபாஸ் ஒரு காலை மட்டும் மடித்து முழங்காலிட்டு அமர்ந்து வில் அம்பை ஏந்தியவாறு வானத்தை பார்த்தவாறு இருக்கிறார். எரியும் வானத்தில் மின்னலாக சீறிப்பாய தயாராக இருக்கிறது வில். பிரபாஸ் ராம் வேடத்தில் கனகச்சிதமாக பொருத்தி இருக்கிறார். சற்று முன் வெளியான போஸ்டர் இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

அயோத்தியில் பிரம்மாண்ட விழா
மேலும், இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வரும் அக்டோபர் 2ந் தேதி இரவு 7.11 மணிக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரின் சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீதையாக க்ரித்தி சனோன்
இப்படத்தில் க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் மற்றும் சன்னி சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சன்னி லட்சுமணனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கிருத்தி சீதையாகவும், சைஃப் அலிகான் ராவணன் பாத்திரத்தில் நடிக்கிறார். ஐமேக்ஸ் மற்றும் 3டியில் ஆதிபுருஷ் திரைப்படம் ஜனவரி 12ந் தேதி திரையில் வெளியாக உள்ளது. பூஷன் குமார், ஓம், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications











