பாகுபலின்னா சும்மாவா: ஷ்ரத்தா கபூரை திக்குமுக்காட வைத்த பிரபாஸ்
ஹைதராபாத்: ஹைதராபாத் வந்த ஷ்ரத்தா கபூருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார் பிரபாஸ்.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்.
அவரை ஒப்பந்தம் செய்வதற்குள் இயக்குனருக்கு கண்ணை கட்டிவிட்டதாம்.

ஹைதராபாத்
சாஹோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஷ்ரத்தா மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்துள்ளார். அவருக்கு ஹைதராபாத் ஸ்பெஷல் விருந்து வைத்து அசத்தியுள்ளார் பிரபாஸ்.

விருந்து
பிரபாஸ் அளித்த விருந்தில் 17 முதல் 18 வகை உணவுகள் இருந்ததாம். இதை சாப்பிடுவதா, அதை சாப்பிடுவதா என்று தெரியாமல் ஷ்ரத்தா திணறினாராம்.

ஷ்ரத்தா
சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூர் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இது குறித்து அறிந்த ஷ்ரத்தா தான் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபாஸ்
சாஹோ படம் தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் இந்தியில் தானே டப்பிங் பேச முடிவு செய்துள்ளார் பிரபாஸ்.


Click it and Unblock the Notifications











