‘’ஆதிபுருஷ்’’ டார்ச்சர்.. சர்ச்சையான முதல் விமர்சனம்.. கடுப்பான படக்குழு!

சென்னை : ஆதிபுருஷ் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் விமர்சனத்தை சென்சார் குழுவின் உறுப்பினர் உமைர் சந்து வெளியிட்டுள்ளார்.

புராணங்களில் இருந்து ஆன்மிகக் கதைகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதே போல ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ்.

Prabhas starrer adipurush movie first review

கடுமையான விமர்சனம் : பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளது. அதில் கிராபிக்ஸ் காட்சி படுமோசமாக உள்ளது என்றும், கார்ட்டூன் படம் பார்ப்பது போல இருக்கிறது என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் கிராபிக்ஸில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து, கிராபிக்ஸ் காட்சிகளை வலுப்படுத்தும் பணி நடைபெற்றது.

கட்டாயத்தில் பிரபாஸ் : இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிபுருஷ் படத்தின் இறுதியான டிரைலரும் வெளியானது. அந்த டிரைலருக்கும் விமர்சனங்கள் வந்ததால், படக்குழுவினர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். அதே போல பிரபாஸ் நடித்த சாஹா,ராதே சியாம் போன்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால் அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் பிரபாஸ் இருக்கிறார்.

Prabhas starrer adipurush movie first review

மோசமான நடிப்பு : இந்நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் குழுவின் உறுப்பினரும், பிரபல திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து படத்தின் முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மோசமாக இருக்கிறது என்றும், பிரபாஸ் நடிப்பு பள்ளி சென்று நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதிபுருஷ் - டார்ச்சர் : மேலும், ஆதிபுருஷ் - டார்ச்சர் என பதிவு செய்துள்ள உமைர் சந்து, பிரபாஸ், கீர்த்தி சானோன் துரதிர்ஷ்டம் தொடர்கிறது என்றும் கூறியுள்ளார். ராமாயணக்கதையை திரையில் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் இந்த பதிவால் கடுப்பாகி உமைர் சந்துக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே படத்தை இணையத்தில் பலர் விமர்சித்து வரும் நிலையில், முதல் விமர்சனம் என்ற பெயரில் தற்போது வந்துள்ள விமர்சனத்தால் படக்குழுவினர் கடுப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X