'ராதே ஷ்யாம்' ரூ.100 கோடி நஷ்டம்.. சோகத்தில் படக்குழு.. அந்த பெயரை தவறவிட்ட பிரபாஸ்!
சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் இரண்டரை ஆண்டு இடைவெளிக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ்
தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஈஸ்வர் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். வர்ஷம் , சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தெலுங்கில் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார் பிரபாஸ்.

பாகுபலி
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படம் இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி வாகை சூடியது. இரண்டாம் பாகம் பத்து நாட்களில் அனைத்து மொழிகளிலும் ரூ 1,000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

100 கோடிக்கு மேல் நஷ்டம்
சாஹோ திரைப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து 11ந் தேதி ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக வெளியான, இத்திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், வெற்றியை பெறவில்லை. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 138 கோடியை வசூலிக்க வேண்டுமாம். படம் வெளியாகி 6 நாட்களாகி உள்ள நிலையில் வெறும் 75 மட்டுமே வசூலாகி உள்ளதால், கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் நஷ்டமடைந்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தவறவிட்ட பிரபாஸ்
பாகுபலி, சாஹோ படத்திற்கு பிறகு உலகமே உற்றும்நோக்கும் நடிகர் "பேன் வேர்ல்ட் ஹீரோ" என்று பெயர் எடுத்த பிரபாஸ் அந்த பெயரை தவறவிட்டுவிட்டதாக அவரது ரசிகர்கள் சோகத்தோடு கூறி வருகின்றனர் . ராதே ஷ்யாம் திரைப்படத்தின் கதைக்களம் சிறப்பாக இருந்த போதும், படம் ஆமை வேகத்தில் நகர்ந்தது தான் இப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











