'ஆதிபுருஷ்'- தீமையை வெல்லும் நன்மையாம்.. அடுத்த வரலாற்று படத்தில் பிரபாஸ்.. 3-டியில் உருவாகிறது!
சென்னை: நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் என்னும் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்த பின் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதையடுத்து அவரது படங்கள் பான் இந்தியா முறையில் மூன்று நான்கு மொழிகளில் உருவாகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு
அவர் நடித்த சாஹோ படம், இந்தி, தெலுங்கு, தமிழில் உருவானது. அடுத்து உருவாகும் ராதே ஷ்யாம் படமும் மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தீபிகா படுகோனுடன் 21-வது படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில் தனது 22 வது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

தீமையை வெல்லும் நன்மை
'ஆதிபுருஷ்' என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். கிளாசிக் காவியமான இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இவர் இந்தியில் உருவாகி உள்ள 'தன்ஹாஜி- த அன்சங்க் வாரியர்' படத்தின் இயக்குனர். இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்று தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள்
டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இந்த பிரமாண்ட 3டி படத்தை தயாரிக்கின்றனர். இந்தி, தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. வில்லன் கேரக்டரில் நடிக்க பாலிவுட் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆவலுடன் இருக்கிறேன்
இந்தப் படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டர்களும் சவால் நிறைந்தது. இது போன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மனதுக்கு நெருக்கமானது
பூஷன் குமார் கூறும்போது, ‘இப்படம் என் மனதுக்கு நெருக்கமானது. நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன. ஆனால் இயக்குனர் ஓம், ஆதிபுருஷ் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, இந்த கனவு படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது என்று எனக்கு தோன்றியது என்றார். இயக்குனர் ஓம் ராவத் கூறும்போது, ‘இதற்கு முன் பார்த்திராத அனுபவத்தை இந்தப் படம் தரும்'என்றார்.


Click it and Unblock the Notifications











