புளித்துப்போன பழைய சோறு.. பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தான் ராஜாசாப். பான் இந்திய திரைப்படமாக தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ராஜாசாப் படம் பார்த்த ரசிகர் ஒருவர் பிரபாஸ் இந்த படத்தில் புதிதாக எதையோ செய்ய முயற்சி செய்து இருக்கிறார். ஆனால், ஒர்க்அவுட் ஆகவில்லை. படம் ஆவரேசாக தான் இருக்கிறது. படத்தில் பல இடங்களில் 'லேக்' இருக்கிறது. படத்தின் காமெடி ஒர்க்கவுட்டாகி உள்ளது. பேய் படம் என்று சொன்னார்கள். ஆனால், படத்தில் எந்த இடத்திலும் பயப்படும்படி எதுவுமே இல்லை. பாடல்கள் ஒன்றும் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. முதலையை வைத்து சண்டைக்காட்சி வருகிறது அது ரசிக்கும்படி இருக்கிறது என்றார்.

Prabhas The Raja Saab Review
Photo Credit:

பழைய கதை: படம் பார்த்தா மற்றொரு ரசிகர் படம் நன்றாக இருக்கிறது. குடும்பத்தோடு, குழந்தைகளோடு இந்த படத்தை பார்க்கலாம். படம் பேய் திரைப்படம் என சொன்னார்கள். ஆனால், அப்படி படத்தில் எந்த காட்சியும் இல்லை. படத்தில் பல இடங்களில் நகைச்சுவை காட்சியை வருகிறது. படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றது. இரண்டாம் பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக சென்றது. ஏற்கனவே இதே போல காஞ்சா, அரண்மனை என பல படத்தை பார்த்து இருக்கிறோம். அந்த படத்தை போல இந்த படத்திலும் காமெடி பேய் தான் வருகிறது. அதைப்படத்தை பான் இந்தியா ஸ்டாரை வைத்து எடுத்து இருக்கிறார்கள். படம் மூன்று மணி நேரம் அதை குறைத்து இருக்கலாம் என்றார்.

தனி ரசிகர்கள்: மற்றொரு ரசிகர், பிரபாஸ் பான் இந்தியன் ஸ்டார், பிரபாஸின் நடிப்பு இந்த படத்தில் அற்புதமாக இருக்கிறது. அவர், ஒரு பான் இந்தியன் ஸ்டார், அவரின் படம் வருடத்திற்கு ஒன்று தான் வெளியாகும். அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பிரபாஸ் படத்தில் நடித்தாலே போதும், அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள், படம் நிச்சயம் நல்ல வசூலை பெறும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை ஏனென்றால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்றார்.

தி ராஜா சாப் கதை: மூதாதையர்களின் சொத்தான பெரிய மாளிகை பயன்படுத்தப்படாமல் இருப்பதால், பண பிரச்சனை காரணமாக பிரபாஷ் அதை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த பழைய அரண்மனையில், அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பிரபாஷ், அமானுஷ்ய சக்தி நிறைந்த அந்த அரண்மனையை தீய சக்திகளிடம் இருந்து மீட்டு விட்டால் அரண்மனை நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அரண்மனைக்குள் செல்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் "ராஜாசாப்" படத்தின் கதை. அதிரடியான திருப்படங்களுடன் திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமான உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரபாஸ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிதிஅகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X