The Raja Saab: சஹானா பாடல் செம மெலடியா இருக்கேப்பா.. லவ் மூட் பிரபாஸ் வேற லெவல்ல இருக்காரே.. குவியும் பாராட்டு

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிகைகள் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் தி ராஜா சாப். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது படத்தின் இரண்டாவது பாடலான சஹானா சஹானா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தி ராஜா சாப் படத்தை இயக்குநர் மாருதி எழுதி இயக்கி உள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் அதற்குண்டான புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதன் பின்னர் வெளியான கண்ணப்பா படத்தில் சிறிய கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படி இருக்கும்போது கல்கி படத்திற்கு பிறகு தி ராஜா சாப் வெளியாவதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

The Raja Saab Second Single Sahana Sahana Song Which Attracts Tamil Fans They Reacts On Social
Photo Credit:

தி ராஜா சாப் படத்தின் கதை ரசிகர்களுக்கு இப்போது வரை கொஞ்சம் சர்ப்ரைஸாகவே உள்ளது. போஸ்டர்களை பார்க்கும்போது படத்தை பேய் படமா என்று கேள்வி கேட்டவர்களும் உள்ளார்கள். அதே நேரத்தில் படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இருக்கும் போல, அதில் தான் இது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டவர்களும் உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, இந்த சந்தேக கேள்விகளுக்கு எல்லாம் வரும் ஜனவரி 9ஆம் தேதி விடை தெரிந்துவிடும்.

இப்படி இருக்கும்போது படக்குழு தரப்பில் இருந்து இரண்டாவது பாடலாக சஹானா சஹானா பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. செம மெலடியாக இந்த பாடல் இருப்பதால் ரசிகர்கள் பாடலைக் கொண்டாடி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் ரிபெல் மூ பிரபாஸ் இப்போது லவ் மூட் பிரபாஸாக மாறிவிட்டார் என்று கமெண்ட் போட்டு பாடலை ரசித்து வருகிறார்கள். மேலும் சிலர் 1000 கோடி ரூபாய் வசூல் லோடிங் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X