என்னங்கடா கடைசியில பிரபாஸை ஜோக்கர் ஆக்கிட்டீங்க.. காஞ்சனாவா.. அரண்மனையா?.. தி ராஜாசாப் டிரைலர்!

சென்னை: தமிழில் ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர். சி ஆரம்பித்து வைத்த காமெடி பேய் பட டிரெண்டிங்கை தில்லுக்கு துட்டு சீரிஸில் சந்தானம் வரை கடைபிடித்து கட்டிக் காப்பாற்றி வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் ஹாரர் காமெடி படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அடிதடி ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த பிரபாஸ் ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளை டார்கெட் செய்து நடித்துள்ள தி ராஜாசாப் படம் வரும் ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால், தமிழ் மொழியில் 10ம் தேதி தான் படம் வருகிறது.

Prabhas The Raja Saab Trailer out now and trolls get started due to Joker look
Photo Credit:

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற டிசம்பர் 27ம் தேதி தி ராஜாசாப் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறடு.

வெளியானது தி ராஜாசாப் டிரைலர்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி ராஜாசாப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பாட்டியின் அசையை நிறைவே நினைக்கும் பிரபாஸ் பேயாக சுற்றும் தாத்தாவின் அரண்மனைக்குள் சிக்கிக் கொள்ள என்ன நடக்கிறது என்கிற கதையுடன் இந்த படம் உருவாகி இருப்பதை டிரைலர் உணர்த்துகிறது.

ஜோக்கரா மாத்திட்டாங்க: டார்லிங் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு பக்கா ஆக்‌ஷன் ஸ்டாராக மாறியிருந்த நிலையில், தி ராஜாசாப் படத்தில் அவரை ஜோக்கராக மாற்றிவிட்டாரே மாருதி என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். டிரைலரின் கடைசியில் ஜோக்கர் கெட்டப்பில் பிரபாஸ் வருவதை பார்த்த ரசிகர்கள் பயங்கர ட்ரோல் மெட்டீரியல் சிக்கிடுச்சு என பதிவிட்டு வருகின்றனர்.

காஞ்சனாவா? அரண்மனையா?: தி ராஜா சாப் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அரண்மனைக்குள் காஞ்சனா என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக தி ராஜா சாப் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. படத்தின் சிஜி காட்சிகள் மற்றும் மேக்கிங் எல்லாம் ரசிகர்களை பயப்படவோ, விழுந்து விழுந்து சிரிக்கும் விதமாக இல்லாமல் சுமாராகத்தான் உள்ளது. படம் எப்படி இருக்கப் போகிறது என்பது ஜனவரி 9ம் தேதி தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X