ஒரு பிரபாஸ் வந்தாலே 1000 கோடி கன்ஃபார்ம்.. இதுல டபுள் ஆக்ஷன் வேறயா?.. எந்த படத்தில் தெரியுமா?
ஹைதராபாத்: அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி பாக்ஸ் ஆபிஸிலும் கல்லாக் கட்டிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கப் போகிறார். கல்கி 2898 ஏடி படத்தை முடித்த பிரபாஸ் ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்கிற அதிரடி அறிவிப்பு பைரவா விஜய் பைக்கில் இருந்து பொக்கே எடுத்துக் கொண்டு வருவது போல பிரபாஸ் இருக்கும் வீடியோ ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.

மாருதி இயக்கத்தில் உருவாகும் பிரபாஸின் ராஜா சாப் திரைப்படம் பிரபாஸை மீண்டும் கலர்ஃபுல் ஹீரோவாக காட்டப் போகிறது. ஹாரர் ரொமாண்டிக் காமெடி படம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ஃபன் படத்தில் இருக்கும் என தெரிகிறது.
1000 கோடி நாயகன்: இந்திய சினிமாவில் சொல்லி அடிக்கும் கில்லியாக பிரபாஸ் 1000 கோடி நாயகனாக மாறியுள்ளார். ராஜமெளலி இல்லைன்னா பிரபாஸ் எல்லாம் வேஸ்ட்டுப்பா என்று ட்ரோல் பண்ணவர்களுக்கு சலார் 700 கோடி, கல்கி 2898 ஏடி 1100 கோடி என அடுத்தடுத்து இரண்டு தரமான சம்பவங்களை செய்து கெத்துக் காட்டியுள்ளார் பிரபாஸ். அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் ராஜா சாப் திரைப்படமும் 1000 கோடி வசூல் ஈட்டும் என்கின்றனர்.
அனிமல் இயக்குநர் இயக்கத்தில்: அமுல் பேபி போல இருக்கும் ரன்பீர் கபூரையே அசுரத்தனமாக நடிக்க வைத்த அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கையில் பிரபாஸ் கிடைத்தால் சும்மா விடுவாரா மனுஷன் அடுத்த 1000 கோடி படத்தை ரெடி பண்ணுங்கடா என ஸ்பிரிட் படத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளாராம் அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் தொடங்கும் என்கின்றனர்.

டபுள் பிரபாஸ்: ஒரு பிரபாஸ் நடித்தாலே 1100 கோடி அசால்ட்டாக வருகிறது. பாகுபலி போல டபுள் ரோலில் பிரபாஸ் நடித்தால் 2000 கோடி கன்ஃபார்ம் என்கின்றனர். ஸ்பிரிட் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு படம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். போலீஸ் கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், அவருக்கு வில்லன் ரோலிலும் பிரபாஸே நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











