Prabhas - ராமர் அவதாரத்தை அடுத்து சிவன் அவதாரம் எடுக்கும் பிரபாஸ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?
ஹைதராபாத்: Prabhas (பிரபாஸ்) பிரபாஸ் அடுத்து ஒரு படத்தில் சிவன் வேடம் ஏற்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த பிரபாஸ் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

சலார்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்தை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ்.
புராஜெக்ட் கே என்ற கல்கி: இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு முதலில் புராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் வில்லனாக இதில் நடிப்பதற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
கல்கி 2898 ஏடி: புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
சிவன் அவதாரம்: இந்நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் கண்ணப்பா என்ற படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஏற்றிருந்த ராமர் கதாபாத்திரம் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இல்லையா சார் ஒரு எண்டு: சூழல் இப்படி இருக்க சிவன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என வெளியாகியுள்ள தகவலை அடுத்து பாகுபலி கொடுத்த பிரபல்யத்தை பிரபாஸ் தவறவிட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் இவ்வாறு தொடர்ந்து கடவுள் வேடங்களையே ஏற்கிறார். இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என்று ரசிகர்கள் சோஷியல் மீடியக்களில் கமெண்ட்ஸை பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











