அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் பிரபாஸின் 20வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
பாகுபலி சீரிஸ், சாஹோ படத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பிரபாஸ் 20' படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் பல்வேறு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

பாகுபலி ஹீரோ
டோலிவுட்டின் டார்லிங் என்றும் ரிபல் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வந்த பிரபாஸ், ராஜமெளலியின் இயக்கத்தில் எப்போ பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்தாரோ, அன்று முதல் உலகளவில் பாகுபலி ஹீரோ என்றே அழைக்கப்பட்டு வருகிறார். பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு உலக அரங்கில் அவரது மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.

ஹை பட்ஜெட்
200 கோடி 300 கோடி என பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்களின் பட்ஜெட் ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில், பாலிவுட் ஹீரோயின் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். மல்டி லேங்குவேஜ் படமாக வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

பிரபாஸ் 20
இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வரும் 'பிரபாஸ் 20' என அழைக்கப்படும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை 10 மணிக்கு வெளியாகிறது. இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன் தற்போது அறிவித்து இருக்கிறது.

டிரெண்டிங்
டார்லிங் பிரபாஸின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில், #Prabhas20 என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பிரபாஸ் நடித்த படங்களின் போட்டோக்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு, தங்களின் வெறித்தன வெயிட்டிங்கை வெளிகாட்டி வருகின்றனர்.

4 மொழிகளில்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1970களில் நடக்கும் காதல் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக, ஜார்ஜியா ஷூட்டிங்கின் போது, டோலிவுட்டில் சில தகவல்கள் கசிந்து இருந்தன. வரும் வெள்ளிக்கிழமை இந்த படம் என்ன மாதிரியான படம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











