காதல் கடல் பொங்க.. பிரபாஸின் 'ராதே ஷ்யாம்’ படத்தின் மெய் சிலிர்க்க வைக்கும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
சென்னை: நடிகர் பிரபாஸின் 20வது படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பாகுபலி சீரிஸ், சாஹோ படத்திற்கு பிறகு பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பிரபாஸ் 20' படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு 'ராதே ஷ்யாம்' என டைட்டில் வைத்துள்ளனர்.

ஜூலை 10
ஜூலை 10 காலை 10 மணிக்கு நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் 'பிரபாஸ் 20' என அழைக்கப்பட்டு வந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என்ற அறிவிப்பு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டது.

ராதே ஷ்யாம்
டோலிவுட்டின் டார்லிங் என்றும் ரிபல் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வரும் நடிகர் பிரபாஸ், டோலிவுட் இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது பிரம்மாண்டமான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

பான் இந்திய படம்
பாகுபலி படத்தை போல இந்த படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என பான் இந்திய படமாக 4 மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் வெளியாகி இருக்கிறது.

காதல் கடல் பொங்க
சிகப்பு நிற ராயல் கவுனில் பூஜா ஹெக்டேவும், வெள்ளை நிற கோட்சூட்டில் பிரபாஸும் இருக அணைத்தபடி படு ரொமான்டிக்காக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ராதா கிருஷ்ணா போல இந்த ராதே ஷ்யாம் காதல் கதையும் மக்கள் மத்தியில் நிலைக்கும் என்றே தெரிகிறது. இருவரது உடைகளும், கடல் போல மாறி காதல் பொங்கி வழிவதை காண முடிகிறது.

இந்தியளவில்
நடிகர் பிரபாஸின் 20வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியளவில் #RadheShyam, #Prabhas20FirstLook, #PoojaHegde உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பாகுபலியை போல நடிகர் பிரபாஸுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் வெற்றியை இந்த படம் தரும் என்றே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











