பிரபாஸ் படத்துக்கு ரூ. 3 கோடியில் பிரமாண்ட செட்... போட்டோ, தகவல்கள் கசிவைத் தடுக்க டைட் செக்யூரிட்டி

By

ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு தனியார் பாதுகாவலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடித்த படம், சாஹோ. மெகா பட்ஜெட்டில் உருவான இதில் ஸ்ரத்தா, அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்தனர்.

தமிழ், இந்தியிலும் வெளியான இந்த படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்தப்படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, பிர்பாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர் தமிழில் முகமூடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ராதாகிருஷ்ணகுமார் இயக்குகிறார். கோபிகிருஷ்ணா மூவிஸ் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

படத்துக்காக ரூ. 3 கோடி செலவில் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடப்படுள்ளது. அங்கு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக, தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செட்டுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர், பவன் கல்யாண் நடிக்கும் பிங்க் ரீமேக் ஆகிய படங்களின் ஷூட்டிங் ஸ்டில்கள் கசிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்துக்குள்

படப்பிடிப்பு தளத்துக்குள்

கடுமையான சோதனைக்குப் பின்பே, உதவி இயக்குனர்கள் உட்பட படத்தில் பணியாற்றுபவர்கள், படப்பிடிப்பு தளத்துக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நான்கு செட்கள் போடப்பட்டுள்ளதாகவும் மேலும் 18 அரங்குகள் வெவ்வேறு இடங்களில் படத்துக்காகப் போடப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரியா நாட்டில்

ஆஸ்திரியா நாட்டில்

இங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த ஷெட்யூல் ஆஸ்திரியா நாட்டில் நடக்க இருக்கிறது. இதற்காக படக்குழு அடுத்த மாதம் அங்கு செல்கிறது. அங்கு சில வசன காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பாகுபலி, சாஹோ படங்களை போல இந்தப் படம் தமிழிலும் உருவாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X