கர்ணனோட கர்ஜனை.. பாக்ஸ் ஆபிஸே சும்மா பத்தி எரியுது.. கல்கி 2898 ஏடி அதிகாரப்பூர்வ வசூல் இதோ!
சென்னை: பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் விரைவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வெளியானது.
கடைசியாக, பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகி ஒன்பது நாட்களில் 800 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபீஸில் அள்ளி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில், அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் மேலும், பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
நான் ஸ்டாப் ரன்னிங்: கல்கி திரைப்படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஹாலிவுட் தரத்திலான படமா என்கிற ஆச்சரியத்தில் பலரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் போர்ஷன் முதல் பாகத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் கர்ணனாக அவர் கர்ஜனை செய்வார் என நாக அஸ்வின் கூறியுள்ளார். கல்கி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கர்ணனாக பிரபாஸை ரிவீல் செய்யும் போதே பிரபாஸ் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் அடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவருக்கான வேலை அதிகம் உள்ளது எனக் கூறியுள்ளார்.
800 கோடி வசூல்: 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கல்கி 2898 ஏடி திரைப்படம் குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால் தான் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக மாறும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்த நிலையில், படம் வெளியான 9 நாட்களில் 800 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது.
1000 கோடி அசால்ட்: சனிக்கிழமை ஆன இன்றும் ஞாயிற்றுக்கிழமை ஆன நாளையும் பிரபாஸின் படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு குவியக் காத்திருக்கின்றனர். இரண்டாவது வார விடுமுறை நாட்களில் படம் பெரிய அளவில் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் 1000 கோடி வசூலை அசால்ட்டாக கல்கி திரைப்படம் தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கர் பரசுராமல் இல்லை: துல்கர் சல்மான் கேப்டன் என்னும் கதாபாத்திரத்தில் கல்கி படத்தில் நடித்துள்ள நிலையில், அவர்தான் பரசுராமர் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நாக் அஸ்வின் துல்கர் சல்மானுக்கு வேறு ரோல் இருக்கிறது என்றும் பரசுராமராக வேறு ஒரு பிரபல நடிகரை நடிக்க வைக்க பிளான் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த பாகத்திலும் ஏகப்பட்ட மகாபாரத கதாபாத்திரங்களே கல்கி படத்தில் வந்து குவியும் என தெரிகிறது. 800 கோடி வசூலை முன்னிட்டு அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











