Kalki: தமிழ்நாட்டில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்.. விலை மட்டும் இத்தனை கோடியா?

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்தை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி இன்னும் 30 நாட்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும் இணைத்து நாக அஸ்வின் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

Prabhas Kalki 2898 AD Bujji Kamal Haasan Keerthy Suresh 2898


அந்த படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக சாலைகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் வாய்ஸ்: கல்கி படத்தின் புஜ்ஜி காருக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். நடிகையர் திலகம் படத்தில் அவர் நாயகியாக நடித்த நிலையில், இந்தப் படத்திலும் நாக் அஸ்வின் வெறும் காருக்கு மட்டும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் டப்பிங் பேசியுள்ளார்.

புஜ்ஜி கார் விலை: சாத்தியமில்லாத ஒரு பிரம்மாண்ட காரை அதுவும் நிஜ சாலையில் ஓடக்கூடிய கண்டிஷன் உடன் உருவாக்கி உள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் இந்த ஒரு காலை மட்டும் உருவாக்கவே செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புஜ்ஜி காரின் விலை மட்டும் 8 கோடி ரூபாய் என்கின்றனர். படத்தில் நடித்த நடிகை திஷா பதானிக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்க மாட்டார்கள். தீபிகா படுகோன் மட்டும் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். திஷா பதானிக்கு வெறும் 4 கோடி ரூபாய் தான் சம்பளம் என கூறுகின்றனர். படத்தின் முக்கிய அங்கமாக பார்க்கப்படும் இந்த காருக்கு 8 கோடி ரூபாய் செலவில் உயிர் கொடுத்துள்ளனர்.

நாகசைதன்யா முதல் நரேன் கார்த்திக் வரை:
புஜ்ஜி காரை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா ஓட்டி பார்த்த நிலையில், அடுத்ததாக இந்தியாவின் எஃப் ஒன் கார் ரேசர் நரேன் கார்த்திக் இந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகின.


சென்னையில் புஜ்ஜி கார்: தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் புஜ்ஜி கார் சாலையில் பயணித்த காட்சிகள் வெளியாகின. திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் பார்வைக்கு காட்டப்பட்ட இந்த புஜ்ஜி கார் சென்னை சாலைகளிலும் வலம் வந்த காட்சிகள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த கார் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளிப்போக வாய்ப்பே இல்லை: ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி கல்கி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புஜ்ஜி அண்ட் பைரவா என ஒரு அனிமேஷன் சீரிஸும் வெளியாகிறது. அதன் மூலம் படத்துக்கு ஒரு நல்ல புரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக 1000 கோடிக்கு மேல் கல்கி வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X