Kalki 2898 AD Box Office: இந்திய சினிமாவிலேயே முதல் முறை.. கல்கி முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!
ஹைதராபாத்: இந்திய சினிமாவிலேயே இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத அளவுக்கு முதல் நாள் வசூலை பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்ய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே நார்த் அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸில் ப்ரீ புக்கிங் மிகப்பெரிய அளவில் உள்ளநிலையில் இந்தியாவிலும் தொடர்ந்து படக்குழு செய்துவரும் புரமோஷன் காரணமாக படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் இந்திய பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட உள்ளதாக கூறுகின்றனர்.
தோல்விகளில் இருந்து மீண்ட பிரபாஸ்: 44 வயதாகும் நடிகர் பிரபாஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவதார புருஷன் ஆகவே மாறிவரும் பிரபாஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ராகவேந்திரா, வர்ஷம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, பில்லா, டார்லிங் என பல படங்களில் நடித்ததன் பின்னர் பாகுபலி 1 மற்றும் 2 படங்களில் நடித்து உலக அளவில் ஃபேமஸ் ஆனார். ஆனால், அந்த படத்துக்கு பிறகும் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அதிக பொருட்செலவில் உருவான படங்களும் தோல்வியை தழுவின. மீண்டும் சலார்படத்தில் கம்பர் கொடுத்த பிரபாஸ் தற்போது கல்கி படத்தின் மூலம் இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக மாற காத்திருக்கிறார்.
முதல் நாள் வசூல் கணிப்பு: விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி வசூல் செய்த நிலையில், பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் 165.3 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் செய்தது. பாகுபலி 2 திரைப்படம் 21.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி வசூலை முதல் நாளில் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபாஸின் கல்கி திரைப்படம் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிகபட்சம் 200 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் ஈட்டும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஹவுஸ்ஃபுல்: ஆந்திரா, தெலங்கானா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் கல்கி படத்துக்கு பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் சுமாரான ஓபனிங்கே இதுவரை உள்ளது. படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் டாக் வந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை கல்கி 2898 ஏடி படம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்கள் திருமணத்துக்கு மொய் வைப்பது போல தியேட்டர்களுகும் மொய் வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











