பக்கத்துல கூட யாரும் வர முடியாது.. பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸ் கொடி.. கல்கி 10 நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: தமிழ்நாட்டில் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால், இந்தியா முழுவதும் 500 கோடி ரூபாய் அளவுக்கு படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. ஓவர்சீஸில் பிரபாஸின் ஃபேன்ஸ் செய்த தரமான சம்பவத்தால் கல்கி படம் 800 கோடி ரூபாய் வசூலை 9 நாட்களில் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகுபலி 2ம் பாகம் 1800 கோடி ரூபாய் வசூலை பெற்றபோது எந்தளவுக்கு வேகமாக ஒவ்வொரு நாளும் வசூல் அள்ளியதோ அதே அளவுக்கு கல்கி 2898 ஏடி திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதே ரேஞ்சில் போனால், கல்கி 2898 ஏடி முதல் பாகமே பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளும் என்கின்றனர்.

Kalki Prabhas Box Office

தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஃபேன்ஸ் ஃபைட் எல்லாம் தாண்டி ஒட்டுமொத்தமாக இருந்து கல்கி 2898 ஏடி படத்தை ஓட வைத்து வருவது தான் இப்படியொரு வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றனர். மேலும், கல்கி 2ம் பாகத்தில் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் நாக் அஸ்வின் இருப்பதாக அவரே சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

கல்கி 2898 ஏடி கதை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தில் இந்துக்களின் புராணமான மகாபாரதம் மற்றும் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரம் என இரண்டையும் மிக்ஸ் செய்து பல ஹாலிவுட் படங்களில் இருந்து ரெஃபரன்ஸ்களை எடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கல்கியை அழிக்க சுப்ரீம் யாஷ்கின் துடித்துக் கொண்டிருக்க, சுமதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனை காப்பாற்ற அஸ்வத்தாம்மா தியானத்தில் இருந்து எழுகிறார். அவரிடம் இருந்து சுமதியை கொண்டு சென்று யாஷ்கினிடம் கொடுத்தால் காம்ப்ளக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாம் என நினைக்கும் பைரவா பிரபாஸ் கர்ணனின் அவதாரம் என முதல் பாகத்தின் கதையை முடித்துள்ளனர்.

Kalki Prabhas Box Office

சனிக்கிழமை செம வசூல்: கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான கல்கி திரைப்படம் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வந்த நிலையில், சனிக்கிழமையான நேற்று மீண்டும் தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து விட்டனர். கல்கி திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் இதுவரை 850 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kalki Prabhas Box Office

லைஃப் டைம் எவ்ளோ?: ஞாயிற்றுக்கிழமையான இன்று உலகம் முழுவதும் 60 முதல் 70 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அதுவரை எந்தவொரு பெரிய படமும் இந்தியளவில் இல்லாத நிலையில், அடுத்த வாரமும் கல்கி திரைப்படம் ஓடும் என்றும் 1000 கோடி வசூலை தொடுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கூறுகின்றனர். தியேட்டர் வசூலை தாண்டி கல்கி திரைப்படம் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸ் என இப்பவே பல நூறு கோடிகளை கூடுதலாக லாபம் பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X