அடேங்கப்பா.. 500 கோடி வசூலை கடந்த கல்கி.. 4 நாளில் பாக்ஸ் ஆபிஸை நாக் அவுட் செய்த பிரபாஸ்!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் வெறும் 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்து டோலிவுட்டுக்கு மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு கொடுத்து அசத்தியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான எந்தவொரு படமும் செய்யாத சாதனையை கல்கி 2898 ஏடி திரைப்படம் செய்துள்ளது.

இதுவரை தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் மட்டுமே 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் 220 கோடி வசூலை ஈட்டியது. பாலிவுட்டில் வெளியான ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியது.

Prabhas Kalki 2898 AD Box Office

ஆனால், 500 கோடி வசூலை அதுவும் வெறும் 4 நாட்களில் வாரிக்குவித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக கல்கி 2898 ஏடி திரைப்படம் மாறியிருப்பது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தையும் கல்கி படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரையும் தெலுங்கு திரையுலகத்தையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஷுவல் பிரில்லியன்ஸ்: பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்கள் சர்வதேச அளவில் விஷுவல் ட்ரீட்டாக அமைந்த நிலையில், அந்த வரிசையில் கல்கி 2898 ஏடி திரைப்படமும் அமைந்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆனாலும், அந்தளவுக்கு ஒரு அவுட்புட்டை டோலிவுட்டிலும் கொடுக்க முடியும் என நாக் அஸ்வின் நிரூபித்துக் காட்டியது மிகப்பெரிய விஷயம் என பல பிரபலங்களால் பாராட்டப்படுகிறது.

500 கோடி வசூல்: கல்கி 2898 ஏடி திரைப்படம் 3 நாட்களில் 415 கோடி வசூலை எடுத்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று இரவுக்காட்சியோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக 530 கோடி வசூலை கல்கி 2898 ஏடி திரைப்படம் பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

வீணடிக்கப்பட்ட கேமியோக்கள்: கல்கி 2898 ஏடி முதல் பாகத்தில் மிருணாள் தாகூர், துல்கர் சல்மான், ராஜமெளலி, ராம் கோபால் வர்மா, அனுதீப் கே.வி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். அதில், விஜய் தேவரகொண்டாவை தவிர்த்து மற்ற அனைவரையும் நாக் அஸ்வின் வீணடித்து விட்டார் என்றும் துல்கர் சல்மானுக்கு 2ம் பார்ட்டில் வெயிட்டான சீன் ஒன்றை வைத்து விடுங்கள் என்றும் அவர் தான் பரசுராமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Prabhas Kalki 2898 AD Box Office

ராமாயணம், மகாபாரதம்: தெலுங்கு சினிமாவில் ராமாயணம் மற்றும் மகாபாரத்தை மட்டுமே வைத்து கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் காட்சிகளை உருவாக்கி அசால்ட்டாக 1000 கோடி வசூல் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர் என்றும் மற்ற மொழிகளில் அந்த வித்தையை சரியாக பயன்படுத்தாத நிலையில் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வருவதில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், தொடர்ந்து இந்த இரண்டு இதிகாசங்களை மட்டுமே வைத்து படங்களை கொடுத்து வந்தால் புதிதாக எதையுமே யோசிக்க மாட்டார்களா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

கல்கி 2 எப்போ வரும்?: கல்கி 2 திரைப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகளை ஏற்கனவே நாக் அஸ்வின் முடித்து விட்டார் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். 600 கோடி பட்ஜெட்டிலேயே கல்கி 2 படத்தையும் நாக் அஸ்வின் 60 சதவீதம் முடித்து விட்டார். இன்னும் 40 சதவீத படப்பிடிப்புகள் மற்றும் சிஜி பணிகள் நிறைவடைந்த உடனே கல்கி 2 திரைப்படம் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X