Kalki 2898 AD movie: சர்வதேச அளவில் 1000 கோடி வசூலை தாண்டிய கல்கி 2898 AD படம்.. படக்குழு உற்சாகம்!

சென்னை: நடிகர் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான கல்கி 2898 AD படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. சில கலவையான விமர்சனங்களை படம் பெற்று இருந்த நிலையிலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்நிலையில் கல்கி 2898 ஏடி படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. படம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட நிலையில் அதை தற்போது அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Prabhas Amitabh bachan Kamal haasan Kalki 2898 AD movie

கல்கி 2898 ஏடி படம்: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் கூட்டணியில் கடந்த மாதத்தில் வெளியான கல்கி 2898 படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களையும் இந்தப் படம் பெற்ற நிலையில் படத்தின் விஎப்எக்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தது. படத்தில் நடிகர் அமிதாபச்சனின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. பிரபாஸ் கேரக்டர் எதிர்பார்த்த அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

1000 கோடி வசூல்: நடிகர் கமல்ஹாசன் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். சில நிமிடங்களே படத்தில் அவரது கேரக்டர் வரும் நிலையில் தனக்கு 2வது பாகத்தில் தான் அதிகமான வேலை இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தில் கொண்டாட பல விஷயங்கள் இருந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடவே செய்தனர். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்களை கொண்டாடிய படக்குழு: இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்களை கொண்டாடவும் தயாரிப்புத் தரப்பு தவறவில்லை. படத்தில் பிரபாசின் போஸ்டரையும் இந்தப் பதிவில் இணைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கவுண்டிங் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் மற்றும் இதிகாசத்தை இணைத்து வெளியான இந்தப் படம் காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றால் கவனத்தை பெற்றிருந்தாலும் திரைக்கதை சோர்வை தருவதாக முன்னதாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.


படத்தின் பலம்: முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 191 கோடி ரூபாய் வசூலை கல்கி 2898 ஏடி படம் ஈட்டியது. படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்றவர்கள் இந்தப்படத்தில் சிறப்பான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இவர்களின் இருப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X