அடேங்கப்பா.. இதுதான் ரியல் வெற்றி.. ஒண்ணு 400 கோடி.. ஒண்ணு 700 கோடி.. சலார், டங்கி சாதனை!

ஹைதராபாத்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியான சலார் மற்றும் டங்கி உள்ளிட்ட இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாகவே மாறியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் மற்றும் டங்கி என மூன்று படங்களுமே ஹிட் அடித்துள்ளன. அதே போல பிரபாஸுக்கு ஆதிபுருஷ் சறுக்கிய நிலையில், சலார் பாக்ஸ் ஆபிஸில் காப்பாற்றி இருக்கிறது.

எப்போதுமே இரு பெரும் படங்கள் மோதும் போது, ஒரு படம் பலத்த அடிவாங்கி விடும். ஆனால், வட இந்தியாவை மட்டுமே டார்கெட் செய்து வெளியான ஷாருக்கானின் டங்கி திரைப்படம் இந்தளவுக்கு வசூல் செய்தது பெரிய சாதனை தான் என்றும் அந்த படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு என்பதால் பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்கின்றனர்.

Prabhass Salaar and Shah Rukh Khan Dunki smashes good numbers at Box Office

700 கோடியை நெருங்கும் சலார்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்த சலார் திரைப்படம் கடந்த டிசம்பர் 22ம் தேதி வெளியான நிலையில், இதுவரை 650 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் கடந்த ஆண்டு வெளியான தென்னிந்திய படங்களில் ஜெயிலர் மற்றும் லியோ வசூலை சலார் முறியடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு புதிய படங்கள் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், இந்த வார இறுதியிலும் சலார் வசூல் வேட்டை ஆடும் என்றும் அதிகபட்சமாக 700 கோடி வசூலை கடக்கும் என்றும் கூறுகின்றனர்.

400 கோடியை தாண்டிய டங்கி: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியான டங்கி திரைப்படம் இதுவரை 400 கோடியை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பொங்கல் விடுமுறை வரை அந்த படம் ஓடும் என்றும் அதிக பட்சமாக 500 கோடி வசூலை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் படமே இல்லை: கடந்த ஆண்டு வரிசையாக ஷாருக்கான் பதான், ஜவான் மற்றும் டங்கி என ஒரு வருஷம் முழுவதும் ஆடிய ருத்ர தாண்டவத்தால் பாலிவுட்டில் மட்டும் 2500 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் ஒரு படம் கூட இல்லையே என்று பாலிவுட் சினிமாவும் ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X