Salaar Box Office: ஷாருக்கானை பந்தாடப் போகிறாரா பிரபாஸ்?.. சலார் முதல் நாள் வசூல் கணிப்பு!
ஹைதராபாத்: இந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் மூலம் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸ் கிங் கானாக மாறியுள்ளார். இந்நிலையில், நாளை வெளியாகும் சலார் படத்திற்கும் இன்று வெளியாகி இருக்கும் டங்கி படத்துக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பிரபாஸுக்கு அதிகளவில் காட்சிகளை ஒதுக்கவில்லை என சர்ச்சை வெடித்தது. கடைசி நேரத்தில் பிரச்சனை எல்லாம் தீர்ந்த நிலையில், பிவிஆர், ஐநாக்ஸில் திட்டமிட்டபடி சலார் நாளை வெளியாகிறது.

500 ரூபாய் டிக்கெட்: தெலங்கானாவில் சராசரியாக அனைத்து தியேட்டர்களிலும் சலார் படத்துக்கு 400 முதல் 500 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிக்கெட் விலை 65 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அனைத்து இடங்களிலும் அதிகரித்து உள்ளதாக கூறுகின்றனர். பாகுபலி படத்திற்கு பிறகு பல வருடங்களாக சொதப்பி வரும் பிரபாஸ் இந்த முறை ஷாருக்கான் உடன் போட்டி போட்டு வெற்றி பெற முடிவு செய்து விட்டார் எனக் கூறுகின்றனர்.
ஏ சர்டிபிகேட்: அனிமல் படத்தைத் தொடர்ந்து பிரபாஸின் சலார் படமும் ஏ சர்டிபிகேட் படமாகவே வெளியாகிறது. அதன் காரணமாக குடும்பத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்ல முடியாது. குழந்தைகளை தயவு செய்து ரசிகர்களும் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். 2 மணி நேரம் 55 நிமிடங்கள் முதல் பாகம் மட்டுமே ஓடப் போகிறது. படத்தின் நீளம் படத்திற்கு கை கொடுக்குமா? அல்லது கவிழ்த்து விடுமா? என்பது நாளை தெரிந்து விடும்.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: இதுவரை வெள்ளிக்கிழமைக்கான அட்வான்ஸ் புக்கிங் நிலவரப்படி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 23.5 கோடி ரூபாயும் தமிழ்நாட்டில் 1 கோடி ரூபாயும், இந்தியில் 2.5 கோடி ரூபாயும், மலையாளத்தில் 1.5 கோடி ரூபாயும், கன்னடத்தில் 50 லட்சம் ரூபாய்க்கும் முன்பதிவு நடைபெற்றது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 80 முதல் 100 கோடி வரை வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











