Salaar Teaser: அதே டெய்லர்.. அதே வாடகை.. கேஜிஎஃப் தொடர்ச்சியா பிரபாஸின் சலார்.. டீசர் எப்படி?
சென்னை: கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள சலார் படத்தின் டீசர் தற்போது சுபமுகூர்த்த நேரத்தை எல்லாம் பார்த்து அதிகாலையிலேயே வெளியானது.
இயக்குநர் பிரசாந்த் நீல் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்கிய கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை அந்த படத்தின் மேக்கிங்கிற்காகவே ஈர்த்தது.

இந்நிலையில், சலார் படத்தின் டீசரும் அதே கேஜிஎஃப் பாணியில் சொல்லப் போனால் கேஜிஎஃப்புக்கு போட்ட செட்டிலேயே படமாக்கப்பட்டது போல உள்ளது.
சலார் டீசர் ரிலீஸ்: இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிரபாஸ் நடிப்பில் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சலார் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு பிராபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் இந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷை பார்த்து அப்செட்டான ரசிகர்களுக்கு சலார் படம் நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் மொமன்ட்டை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சலார் படத்தின் ரிலீஸை முன்னிட்டு அதன் டீசர் இன்று அதிகாலை வெளியானது. வழக்கம் போலவே கேஜிஎஃப் படத்தில் எப்படி ராக்கி பாய்க்கு பில்டப் இருக்குமோ அதே போன்ற ஒரு பில்டப் காட்சியைத் தான் டீசராக வைத்துள்ளனர்.
என்னது ஜுராசிக் பார்க்கா: விக்ரம் படத்துல காடுன்னு ஒன்னு இருந்தா என ஆரம்பித்து சிங்கம் தான் ராஜான்னு சொல்லி முடிப்பாங்க.. ஆனால், இது பிரபாஸ் படமில்லையா சிங்கம் எல்லாம் ஓவர் இனிமேல் அதை விட பெரிய மிருகத்தை சொல்லணும் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன டைனோசர்கள் கதையை சொல்ல ஜுராசிக் பார்க் என்கிற வசனத்தை ஒரு வயதான தாத்தா ஆப்பிரிக்கர்கள் பலர் அவரை சுற்றி துப்பாக்கியால் சூழ பிரபாஸ் புராணத்தை பாடுகிறார்.
அந்த வயசானவருக்கு ஒரு துப்பாக்கியே ஜாஸ்தி ஏன் டா இப்படி என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

முகத்தையே காட்டல: கடைசி வரை டீசரில் பிரபாஸின் தரிசனத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பிரபாஸின் ஒரு கையை பார்த்துட்டு போங்க என ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் போலவே டீசரிலும் முகத்தைக் காட்டாமல் ஏமாற்றி விட்டனர்.
நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளதாக அறிவித்து இருந்தாலும், அவரும் ஒரு ஷாட்டில் கூட இல்லை. பெயருக்கு இந்த படத்தின் வில்லன் பிரித்விராஜ் என்பதற்காக அவருக்கு குங்குமத்தில் பட்டை நாமம் போட்டு உட்கார வைத்துள்ளனர். அவரது அந்த ஒரு செகண்ட் காட்சியும் பெரிதாக இம்பாக்ட் கொடுக்கவில்லை. வெறும் டீசரை வைத்தே பிரசாந்த் நீலை எடை போட்டு விட முடியாது ஏகப்பட்ட பெரியம்மாவை படத்தில் இறக்குவார் என நம்புவோம். இது சலார் முதல் பாகம் சீஸ் ஃபையர் என்றும் இன்னொரு பாகமும் வருகிறது என பலே பில்டப் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











