»   »  பிரபு மகன் திருமணம்-ரஜினி ஆசி

பிரபு மகன் திருமணம்-ரஜினி ஆசி

Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கும், லட்சுமி உஜ்ஜைனிக்கும் சென்னையில் இன்று வெகு விமரிசையாகதிருமணம் நடந்தது.

எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் நடந்த திருமணத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அவரை பிரபு, ராம்குமார் வரவேற்று அழைத்துச் சென்றனர்.கருணாநிதி தாலியை எடுத்து விக்ரம் கையில் கொடுத்து அவரை ஆசிர்வதித்தார். 6.40 மணிக்கு மணமகள் கழுத்தில் விக்ரம் தாலி கட்டினார்.

திருமணத்தின்போது சிவாஜியின் மனைவி கமலா அம்மாள், மகள் சாந்தி, பிரபு, அவரது மனைவி புனிதவதி, ராம்குமார், அவருடைய மனைவி பேபி உள்ளிட்டோர்,இரு தரப்பு குடும்பத்தினர் இருந்தனர்.

திருமணத்திற்குப் பின் விக்ரமும், லட்சுமியும் முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருமணத்திற்கு வரவில்லை. தனது உதவியாளர் மூலம் வாழ்த்துச் செய்தி கொடுத்து அனுப்பியிருந்தார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, சிவக்குமார், பருத்தி வீரன் நாயகன் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினரும் பெருவாரியாகவந்திருந்தனர்.

முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

நேற்று மாலை நடந்த மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பழனிமாணிக்கம், ராஜா, ஜி.கே.வாசன், அமைச்சர்ஸ்டாலின், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன், நீதிபதி சதாசிவம்,

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், தி.க தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil