பிரபு தேவா நடிக்கும் ஊமை விழிகள் 2 - செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

Recommended Video

பிரபு தேவா நடிக்கும் ஊமை விழிகள் 2 - செகண்ட் லுக் போஸ்டர் | Prabhu Deva’s Oomai Vizhigal poster

சென்னை: பிரபு தேவா நடிப்பில் அறிமுக இயக்குநர் வி.எஸ் இயக்கும் புதிய திரைப்படம் ஊமை விழிகள் 2. இப்படத்தை தனஞ்செயன் தயாரித்து வருகிறார். ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருந்த நிலையில், இரண்டாவது போஸ்டரை தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் பிரபு தேவா. இவர் தமிழக மக்களால் இந்திய மைக்கல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படுவார். இவர் தமிழ் மட்டுமின்றி மொத்த இந்திய சினிமாவிற்குமே நன்கு பிரபலமானவர். இவர் நடன கலைஞராக தான் முதலில் சினிமாவுக்கு அறிகுமானார்.

Prabhu Deva Acts Oomai Vizhigal Film 2nd look poster released

இவரின் அப்பாவான சுந்தரம் மாஸ்டரும் நடன இயக்குநர் என்பதாலேயே இவரும் நடன இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்தார். பிரபுதேவா நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளார் என பல்வேறு பரிமாணங்களை அடைந்தார்.

இவர் அலாவுதீன், ஏழையின் சிரிப்பில், சுயம்வரம், சந்தோஷம், எங்கள் அண்ணா, அள்ளி தந்த வானம், பெண்ணின் மனதை தொட்டு, காதலா காதலா, காதலன், உருமி, மிஸ்டர் ரோமியோ, மின்சார கணவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பையும் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

பௌர்ணமி, போக்கிரி, சங்கர் தாதா, சிந்துபாத், வில்லு, வாண்டட், எங்கேயும் காதல், வெடி, ரவுடி ராத்தோர், ராமையா ஒஸ்தாவையா, ர..ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் சிறந்த நடன இயக்குநருக்கான பத்ம ஶ்ரீ விருதினையும் வென்றுள்ளார்.

பிரபு தேவா கடைசியாக தமிழில் தேவி 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். தற்போது பிரபு தேவா ஊமை விழிகள் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தை இயக்கி வருகிறார் வி.எஸ். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் ட்விட்டரில் ரிலீஸ் செய்திருந்தார். தற்போது ஊமை விழிகள் இரண்டாவது போஸ்டரை ட்விட்டரில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ரிலீஸ் செய்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

தற்போது, பிரபு தேவா ஊமை விழிகள் படத்தை தொடர்ந்து பொன் மாணிக்கவேல், தேள், யுங் மங் சுங் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X