மீண்டும் இணைகிறதா பிரபு தேவா - கல்யாண் கூட்டணி!?

சென்னை: பிரபு தேவா திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

Recommended Video

Bhageera Teaser Detailed | Prabhudeva, Adhik Ravichandran

சமீப காலத்தில் நடிப்பது மட்டுமன்றி தமிழ் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படங்களையும் இயக்கி வருகிறார்.

கமர்ஷியல் ரீதியாக தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பிரபு தேவா.

சோபிக்க தவறியது

சோபிக்க தவறியது

சமீபத்தில் வெளியான சல்மான் கானின் ராதே எனும் பாலிவுட் படத்தினை இயக்கி இருந்தார் பிரபு தேவா. சல்மான் கான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் படம் சோபிக்க தவறி தோல்வியை தழுவியுள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்கள் பிரபு தேவாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது. இவற்றில் இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிரபு தேவா கமர்ஷியல் ரீதியாக நல்ல படங்களில் நடித்து வருவதால் இந்த படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

2018ம் ஆண்டு கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் வெளியான படம் குலேபகாவலி.

காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்நிலையில் குலேபகாவலி இயக்குனர் கல்யாண் உடன் பிரபு தேவா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X