இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் சம்பவம்.. நாட்டு நாட்டு பாடலுக்கு செம ஆட்டம்

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவா போட்டிருக்கும் ஆட்டம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் , சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூலை வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர்

வசூலை வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர்

பீரியட் ஃபிலிமாக உருவாகியிருந்த ஆர்ஆர்ஆர் படம் கடந்த ஆண்டு பான் இந்தியா படமாக வெளியானது. ராஜமௌலி இயக்கியிருந்த பாகுபலி படம் ஏற்கனவே இந்திய அளவில் வசூலை வாரி குவித்ததால் இந்தப் படம் மீதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பன்மடங்காக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக சண்டை காட்சிகளும், பல பிரமாண்ட காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதனால் ஆர்ஆர்ஆர் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

ரசிகர்களை வைப் செய்த நாட்டு நாட்டு பாடல்

ரசிகர்களை வைப் செய்த நாட்டு நாட்டு பாடல்

படத்திற்கு இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. கீரவாணியின் பின்னணி இசை ஒருபக்கம் அட்டகாசமாக இருக்க நாட்டு நாட்டு பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக அந்தப் பாடலின் வேகமான இசையும், அதற்கு ஜூனிய என்.டி.ஆரும், ராம் சரணும் போட்டிருந்த ஆட்டம் அதகளம் செய்தது. மிகச்சிறப்பாக நடனம் ஆடக்கூடிய இரண்டு பேரும் ஒரே பாட்டுக்கு போட்டிப்போட்டு ஆடிய ஆட்டம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது.

விருதுகளை குவித்த நாட்டு நாட்டு பாடல்

விருதுகளை குவித்த நாட்டு நாட்டு பாடல்

ஒருபக்கம் படம் வசூலை குவிக்க மறுபக்கம் நாட்டு நாட்டு பாடல் விருதுகளை குவித்தது. முதலில் கோல்டன் குளோப் விருதை வென்ற அந்தப் பாடல் அடுத்ததாக திரையுலகின் உச்ச விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக பெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் விருது பெறும் முதல் இந்திய பட பாடல் என்ற பெருமையை ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பெற்றது.

நாட்டு நாட்டு பாடலுக்கு பிரபுதேவாவின் ஆட்டம்

நாட்டு நாட்டு பாடலுக்கு பிரபுதேவாவின் ஆட்டம்

இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு உலகம் முழுவதும் பலரும் நடனம் ஆடி ரீல்ஸாக வெளியிட்டுவந்தனர். அந்தவகையில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். ஏறத்தாழ் 100 பேருடன் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடும் பிரபுதேவாவின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பிரபுதேவா ஆடியவுடன் இந்தப் பாடலுக்கு வேறு ஒரு கலர் வந்திருக்கிறது. அவ்வளவு ஸ்டைலாக ஆடியிருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.

பிரபுதேவாவின் மாஸ்

பிரபுதேவாவின் மாஸ்

பிரபுதேவா நடன அமைப்பாளர் மட்டுமின்றி நடிகரும், இயக்குநரும்கூட. பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர் தமிழில் இயக்கிய போக்கிரி படம் மெகா ஹிட்டாக அதை ஹிந்தியில் ரீமேக் செய்தார். அந்தப் படம் அங்கும் மெகா ஹிட்டாக இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X